Showing posts with label திருப்பதி இரண்டுநாள் பயணம் வேங்கடவன் தரிசனம் கவிதை. Show all posts
Showing posts with label திருப்பதி இரண்டுநாள் பயணம் வேங்கடவன் தரிசனம் கவிதை. Show all posts

Saturday, August 22, 2015

திருப்பதிக்கு போனநான் நாராயணா –வணங்கி திரும்பி வந்தேன் உடல்நொந்து நாராயணா!


திருப்பதிக்கு போனநான் நாராயணா –வணங்கி
திரும்பி வந்தேன் உடல்நொந்து நாராயணா!
நெருக்கடியில் சிக்கிவிட்டேன் நாராயணா =பெரும்
நீள்வரிசை தள்ளுமுள்ளு நாராயணா!
உருப்படியாய் சேதமின்றி நாராயணா-மீள
உன்னருளே காரணமாம் நாராயணா!
திருப்படிகள பலகடந்து நாராயணா-உன்னை
தேடிவந்து காண்கின்றார் நாராயணா!


பாத்தயிடம் எல்லாமே நாராயணா-கண்ணில்
பக்தர்களே தென்பட்டார் நாராயணா!
மூத்தவர்க்கு தனிவரிசை நாராயணா-ஆனால்
முறையாக நடக்கவில்லை நாராயணா!
காத்திருக்கும் மக்களவர் நாராயணா- எங்கும்
கணக்கிடவே இயலாது நாராயணா!
நாத்தழும்பு ஏறிவிட நாராயணா-உந்தன்
நாமந்தான் ஒலிக்கிறது நாராயணா!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...