தைமகளே! தைமகளே!
வருக! வருக!- ஈழத்
தமிழர்களின் துயர்நீக்கித் தருக! தருக!
கையிகந்து நாள்தோறும் தொல்லை உற்றே-சிங்கள
கயவர்களால் எண்ணில்லா துயரம் பெற்றே!
செய்யவழி
ஏதுமின்றி தமிழர் அங்கே!- உலகு
செப்பினாலும் கேட்பதற்கு நாதி எங்கே!
உய்யவழி செய்வாயா இந்த ஆண்டே –நம்பி
உனைப்போற்றி ,ஏற்கின்றோம் நாங்கள் ஈண்டே!
புலவர் சா இராமாநுசம்

