Showing posts with label தொட்டால் தொடரும் வெற்றிப் பெறுமே வாழ்த்து. Show all posts
Showing posts with label தொட்டால் தொடரும் வெற்றிப் பெறுமே வாழ்த்து. Show all posts

Friday, January 23, 2015

தொட்டால் தொடரும் வெற்றிப் பெறுமே வாழ்த்து !



 வாழ்த்து !

தொட்டால் தொடரும் வெற்றிப் பெறுமே- சங்கரைத்
தேடிபல வாய்புகளும் மேலும் வருமே
திட்டமிட்டு எச்செயலும் செய்வார் அவரே- இனிக்கும்
தேன்தானே! அவர்குணமே! இல்லை நிகரே


இரவுபகல் பாராது எடுத்தப் படமே-குறை
இருக்குமெனச் சொல்வதற்கு இல்லை இடமே
வரவுக்கே வழிசெய்யும் மக்கள் கூட்டம்- நிரம்பி
வழிந்திடுமே! அரங்கத்தில் வருவோர் நாட்டம்!

வருங்காலம் இதையறியும் உண்மை என்றே –திரை
வரலாற்றில் தனியிடமே பெறுமாம் இன்றே
திருநாளாய் தொடரட்டும் சங்கர் வெற்றி –அவர்
தொட்டால் தொடரட்டும்! நாளும் பெற்றி!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...