Showing posts with label நாளும் தோன்றும் புதிய கட்சிகள். Show all posts
Showing posts with label நாளும் தோன்றும் புதிய கட்சிகள். Show all posts

Wednesday, February 28, 2018

பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்



பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும்
புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்
பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும்
பதவிபட்டம் பணமென்றே கொள்கை நாட்டமே
உழுதுயிட்ட பயிரெல்லாம் நாசம் ஆகவே-கண்ட
உழவனவன் வழியின்றி மோசம் போகவே
விழுதுவிட்டே வளர்கிறது ஊழல் மரமே-மக்கள்
வேதனையே படுவதுவா இறைவன் வரமே


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...