Showing posts with label நாளும் எழுத ஆசை தொல்லை தரும் முதுமை கவிதை. Show all posts
Showing posts with label நாளும் எழுத ஆசை தொல்லை தரும் முதுமை கவிதை. Show all posts

Friday, February 2, 2018

நாள்தோறும் கவிதைதனை நானெழுத முயன்றாலும்


நாள்தோறும் கவிதைதனை
நானெழுத முயன்றாலும்
வாள்போலும் முதுகுவலி
வாட்டிடவே அயின்றாலும்
தோள்கொடுத்து காக்கின்றாள்
தூயத்தமிழ் அன்னையவள்
தாள்தொட்டு தொழுகின்றேன்
தவறாமல் எழுதுகின்றேன்


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...