Showing posts with label புதிய அரசு எதிர்கட்சி அவை அமைதி விதிப்படி நடத்தல். Show all posts
Showing posts with label புதிய அரசு எதிர்கட்சி அவை அமைதி விதிப்படி நடத்தல். Show all posts

Tuesday, May 24, 2016

நடந்தது நடந்து போக –இனியே நடப்பது நலமாய் ஆக!


நடந்தது நடந்து போக –இனியே
நடப்பது நலமாய் ஆக
அடமது துளியும் இன்றே- புதிய
ஆட்சியை நடத்திச் சென்றே
விடமது ஏறல் போன்றே –நாளும்
விலைவாசி உயரா ஒன்றே
தடமது காண வேண்டும் –ஆட்சி
தழைத்திட செய்வீர் ஈண்டும்


எதிர்கட்சி என்றால் எதையும் -உடனே
எதிர்ப்பது அல்ல அதையும்
மதிப்பது அளித்து ஆய்ந்தே-நாட்டு
மக்களின் நலமது ஓர்ந்தே!
விதிப்படி ஏற்றுக் கொண்டோ-அல்லதன்
விளைவினை விளக்கி விண்டோ
கொதிப்பது இன்றி அவையை-இருவரும்
கொள்கையாய் நடத்தின் சுவையே!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...