Showing posts with label மத்திய அரசு அமைச்சர்கள் பேசுவது பின்பு மறுப்பது கவிதை. Show all posts
Showing posts with label மத்திய அரசு அமைச்சர்கள் பேசுவது பின்பு மறுப்பது கவிதை. Show all posts

Friday, December 19, 2014

மத்தியிலே கல்விக்கோர் அமைச்சர் இவரே மறவாதீர் அவருக்கே இல்லை நிகரே!



மத்தியிலே கல்விக்கோர் அமைச்சர் இவரே
     மறவாதீர் அவருக்கே இல்லை நிகரே!
புத்தியிலே நமக்கெல்லாம் என்றே நாளும்
    புலம்புகின்றார் கண்டபடி பாவம்! மேலும்,
எத்னையோ பணியிருக்க அதனை விட்டே
    எண்ணாமல் ஆயாமல் வேலைக் கெட்டே!
பித்தமது பிடித்தவராய் மாற்றி வீணே
    பேசுகின்றார் ஐயகோ! நியாயம் தானோ!?


ஆண்டாண்டு காலமாக  இருக்கும்  ஒன்றே
      அறியாது ஐயகோ  மாற்றல்  என்றே!
தூண்டாதீர்  மதவெறியை  அமைதி  கெடுமே
      தொடராது  இனியேனும்  வாழ  விடுமே!
வேண்டாத  வீண்வேலை ஆகும் தானே
       விடுமுறையே இல்லையென பின்பு, தானே
கூண்டா மக்களது  எதிர்புக்   கண்டே
      கூறவில்லை என்பதுவா  மக்கள்  தொண்டே!

 புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...