Showing posts with label மழை வேண்டல் கவிதை புனைவு. Show all posts
Showing posts with label மழை வேண்டல் கவிதை புனைவு. Show all posts

Friday, August 11, 2017

வாசலுக்கு நீர்தெளித்தல் போல நாளும்-ஏனோ வந்துவந்து போகின்ற மழையே !



வாசலுக்கு நீர்தெளித்தல் போல நாளும்-ஏனோ
வந்துவந்து போகின்ற மழையே !மேலும்
பூசலுக்கும் ஆளாகி பதவி வெறியில்-ஆள்வோர்
போடுகின்ற போட்டிமிக ,அந்தோ நெறியில்
பேசலுக்கு ஏதுமில்லை பதறும் நெஞ்சம்-நாங்கள்
பிழைக்கவழி காட்டுவாயா மழையே தஞ்சம்
நாசமிக ஆவதற்குள் திரண்டு வருவாய்-என்றே
நம்புகின்றோம் மாமழையை விரைவில் தருவாய்!!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...