Showing posts with label மாண்புமிகு முதல்வர் வேண்டு கோள் மதுவிலக்கு வெற்றி தூண்டு கோல். Show all posts
Showing posts with label மாண்புமிகு முதல்வர் வேண்டு கோள் மதுவிலக்கு வெற்றி தூண்டு கோல். Show all posts

Thursday, August 6, 2015

மாண்புமிகு முதல்வர்க்கோர் வேண்டு கோளே மதுவிலக்கு வெற்றிக்கோர் தூண்டு கோலே!


மாண்புமிகு முதல்வர்க்கோர் வேண்டு கோளே
மதுவிலக்கு வெற்றிக்கோர் தூண்டு கோலே
வீணலவே! விளம்புவது உண்மை ஒன்றே
விளக்கமுற வருங்காலம் காட்டும் நன்றே
காணவென காட்சிபல காண்பீர்! இங்கே
கட்சிகளும் அறப்போரில் ஏற்றார் பங்கே!
பேணலரும் செயலெனும் உம்மால் முடியும்
பெருமைவர வாழ்த்திடுவர்! துயரம் விடியும்!


ஏதுமினி இலவசத்தால் பயனே இல்லை
எண்ணிடுவீர்! அதனாலே வந்தத் தொல்லை
போதுமினி மக்களவர் உழைத்து வாழ
பூரணமாய் மதுவிலக்கு நாட்டில் சூழ!
தீதுமினி நடவாது செய்வீர் ஈண்டும்
தெய்வமெனத் தாய்க்குலமே போற்ற யாண்டும்!
யாதுமினி செய்வதற்கு தருணம் இதுவே
யாவருக்கும் தெரியுமிது ஒழிய மதுவே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...