Showing posts with label முகநூல் வலைத்தளம் பதிவுகள் எழுதுதல் பற்றி. Show all posts
Showing posts with label முகநூல் வலைத்தளம் பதிவுகள் எழுதுதல் பற்றி. Show all posts

Thursday, December 26, 2013

ஏனோ தொடங்கினேன் முகநூலே-நான் எழுதிட எழுதிட அகம்நாளே!



ஏனோ தொடங்கினேன் முகநூலே-நான்
எழுதிட எழுதிட வலைநாளே!
தானே வந்திடும் பதிவுபல-வர
தொல்லை தந்திடும் பதிவுசில!
தேனாய் இனித்திடும் சிலவேளை
தேளாய் கொட்டும் பலவேலை!
ஆனால் விடவும் இயலவில்லை-எனினும்
அஞ்சுதல் வாழ்வில் பயிலவில்லை!

நித்தம் எழுதியே வருவேனே – உலகில்
நிலையல வாழ்வு அறிவேனே!
சித்தம் மகிழ மறுமொழியும்-உடன்
செப்பிட விருப்பம் தருமொழியும்!
சத்தென என்னை வாழ்விக்கும்-மருத்துவ
சக்தியாய் மேலும் ஊக்குவிக்கும்!
வித்தென நாளும் வருவீரே-அதுவே
விளைந்திட விருப்பம் தருவீரே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...