Showing posts with label முதல்வர் மீனவர் கைது ஆவதா அறப்போர் நடத்த வேண்டுதல். Show all posts
Showing posts with label முதல்வர் மீனவர் கைது ஆவதா அறப்போர் நடத்த வேண்டுதல். Show all posts

Friday, January 3, 2014

அம்மா முதல்வர் அம்மாவே –கைது ஆவதா மீனவர் அம்மாவே




அம்மா முதல்வர் அம்மாவே –கைது
    ஆவதா ? மீனவர்  அம்மாவே
சும்மா சும்மா நடக்குதே –துயர்
    சுமந்து நெஞ்சம் வெடிக்குதே
இம்மா நிலத்தில் அவர்வாழ –இனி
    இடமே இல்லையா !நலம்சூழ
அம்மா முடிவு எடுப்பீரே –இந்த
     அவலத்தை உடனே தடுப்பீரே

துணிவே துணையாய்க்  கொண்டவரே-கைது
     தொடர்கதை யாவதைக் கண்டவரே
இணயாய்  நாங்களும் வருகின்றோம் –மக்கள்
     எழுச்சியைத் திரட்டி தருகின்றோம்
அணையாய் அனைவரும் ஒன்றாக –கடல்
     அலையென ஓய்வு இன்றாக
பணிவாய் உம்மை  வேண்டுகிறோம் –அறப்
     போர்செய உடனே தூண்டுகிறோம்

             புலவர்  சா  இராமாநுசம்




இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...