நடுங்கும் குளிரில் வாடுகின்றேன்-கற்ற
நற்றமிழ் போர்வையால் பாடுகின்றேன்
ஒடுங்கிட ஐம்பொறி வாடையிலே-மேலும்
உடுத்திட கம்பளி ஆடையிலே
அடங்கிட தந்தது செம்மைதனை-துன்பம்
அகன்றது அடைந்தது வெம்மைதனை
தொடங்கிய கவிதையை முடித்திடவே-உறவும்
தொடர்ந்து நாளும் படித்திடவே
புலவர் சா இராமாநுசம்

