Showing posts with label வலையில் பலபேர் எழுதவில்லை வாராக் காரணம் தெரியவில்லை. Show all posts
Showing posts with label வலையில் பலபேர் எழுதவில்லை வாராக் காரணம் தெரியவில்லை. Show all posts

Tuesday, September 23, 2014

வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே வாராக் காரணம் தெரியவில்லை!



வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே
வாராக் காரணம் தெரியவில்லை-தாமரை,
இலையில் நீரென வருகின்றார்- பதிவும்
இருப்பதாய் ஒப்புக்கு தருகின்றார்- சிலர்
நிலையில் மாற்றம் நன்றல்ல-காலம்
நிலையில் ! அறிவோம்! இன்றல்ல-எனினும்,
வலையில் எழுதியே வளர்ந்தோமே –அதை
வளர்த்திடும் பணியில் தளர்ந்தோமே!


நன்றி மறப்பது நன்றல்ல-நமக்கே
நவின்றது வள்ளுவன் இன்றல்ல-முகநூல்
சென்றது அணுவும் தவறல்ல-கருத்தைச்
செப்பிட அதுவும் வேறல்ல-ஆனால்
நின்றது வலைவழி வருவதுமே-என
நினைத்திட, பதிவிதும் தருவதுமே!-கடன்
என்றதே என்னுள் மனசாட்சி-அதனால்
எழுதினேன்! எழுதுதல், மிகமாட்சி!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...