வள்ளுவரும் வகுத்தநெறி வழியில் சென்றே-முயன்று
வாழ்வார்க்கு வாராதாம் தீமை ஒன்றே
உள்ளுவரேல் உண்மைகளை ஓர்ந்தும் நன்றே-என்றும்
உணர்ந்தாலே போதுமென வாழ்வீர் இன்றே
தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டி'நல் மறையே-உயர்
திருக்குறளே துணையென்றால் வாழ்வில்வரா குறையே
தள்ளுவனத் தள்ளி கொள்ளுவனக் கொள்வீர்-இதுவே
கொள்கையெனச் சொல்வீர் குறையின்றி வெல்வீர்!
புலவர் சா இராமாநுசம்

