நன்றி நன்றி உறவுகளே-வாழ்த்தை
நவின்றீர் அளவில் உறவுகளே
ஒன்றிய உளத்தொடு தொலைவழியே-பலரும்
உரைத்திட கசிந்தன இருவிழியே
குன்றென வாழ்வீர் என்நாளும் –ஏதும்
குறையின்றி வாழ்வீர் மேன்மேலும்
இன்றெனை வாழ்திய அனைவருக்கும்-என்றும்
இறைவன் அருள்தர வேண்டுகிறேன்
புலவர் சா இராமாநுசம்

