Showing posts with label அலைபாயும் மனதின் அவலம். Show all posts
Showing posts with label அலைபாயும் மனதின் அவலம். Show all posts

Wednesday, July 26, 2017

நீங்காது மனதினிலே அலைபோல் மோத!





நீங்காது மனதினிலே அலைபோல் மோத
நிலையின்றி பல்வகையும் நினைவில் ஓத
தூங்காத விழியிரண்டும் துணையாய் நின்றே
தொலையாத இரவுதனை தொலைத்தேன் நன்றே
தாங்காது தவிப்பதும் எத்தனை நாளோ
தடமறியா என்நெஞ்சை அறுக்கும் வாளோ
ஏங்காது வாழ்கின்ற நாளும் வருமா
எல்லையின்றி ஓர்முடிவை விரைவில் தருமா


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...