சல்மானே
! நீர்சென்று-அங்கே
சாதித் தென்ன?
சொல்வீரா தீதேதும் - இதனால்
தொடராதா இனியேதும்
கல்மனமும் கரையுமென -கண்டு
கேமரூன்
கண்ணீர்விட!
பல்முறையும் சென்றீரே -நீர்
பகர்ந்தீரா
! பார்த்தீரா !
ஆணையிட முடியாதாம் -அவன்
ஆணவமாய் பேசுகின்றான்!
பூணையென போய்விட்டு, -சத்தமின்றி
பொறுமைமிக!
வாய்விட்டு,
மானமின்றி!
மன்னிப்பும் -அடிமையென
மண்டியிட்டு கேட்பதா!?
யானைபல மிந்தியா – பலன்
என்னவென !
சிந்தியா?
தொப்புள் கொடியுறவு –இங்கே
துடிக்கிறது ! வெடிக்கிறது!
தப்புக்குத் துணையாக –அன்று
தாளமிட்ட
காரணத்தால்
ஒப்புக்கே
ஆடுகின்றார் –நடந்த
உண்மையிலே!
நாடகமே!
செப்பிக்க
ஏதுமில்லை! – வாழ
செந்தமிழா ஒன்றுபடு!
புலவர் சா இராமாநுசம்

