நடக்கிறதா அரசுயென
தெரிய வில்லை-நாட்டில்
நடப்பதென்ன
ஒன்றுமே புரிய வில்லை!
முடங்கியதோ
செயல் படுதல் என்றே-குழப்பம்
மனமுழுதும் தோன்றிவிட ஏனோ! ஒன்றே
படச்சுருளாய்
ஒடுதய்யா எண்ணத் திரையில்-நின்று
பாழுமனம் தேடுதய்யா அந்தோ குறையில்
வடக்கிருந்து வருகிறதே
ஊதக் காற்றும்-ஏதும்
வாய்திறவா தமிழரசே உண்மை சாற்றும்
புலவர்
சா இராமாநுசம்

