வடநாடுச் சென்றும்
வாளாய் திரும்பிட
கொடநாடும்
சென்றாராம் இன்றும் – திடமான
திட்டமின்றி! மக்கள் தினந்தோறும்
தேம்பியழ
வெட்டும்மின்
வெட்டே விளம்பு
ஆள்வோர்க்கும்
துன்புண்டா ஆண்டோர்க்கும் துன்புண்டா
மாள்வார்கள் மக்கள்தான்
மாறாதா –நாள்போதல்
சொல்லும் தரமல்ல
சோகம்தான் என்றுமினி
கொல்லும்
நிலைதானே கூறு
இப்படியே போனாலே
என்செய்வோம் சொல்லுங்கள்
ஒப்பிடவே ஏதுண்டா? உண்மையிலே –செப்பிடவே
பஞ்சம் பசிப்பிணி
பரவிடுமே ஊரெங்கும்
நெஞ்சம் பதற
நிதம்
எங்கும்போர் என்றேதான்
ஏங்கும் நிலைதானே
பொங்கும்
செயல்கண்டே புண்படுமே – தங்கமென
வாங்கும் பொருளெல்லாம்
வானுயர ஏறவிலை
தாங்கும்
நிலையுண்டா தான்!
புலவர் சா இராமாநுசம்

