வாசலுக்கு நீர்தெளித்தல் போல நாளும்-ஏனோ
 வந்துவந்து போகின்ற மழையே !மேலும்
 பூசலுக்கும்  ஆளாகி  பதவி வெறியில்-ஆள்வோர் 
 போடுகின்ற போட்டிமிக ,அந்தோ நெறியில்
 பேசலுக்கு ஏதுமில்லை பதறும் நெஞ்சம்-நாங்கள்
 பிழைக்கவழி காட்டுவாயா மழையே தஞ்சம்
 நாசமிக ஆவதற்குள் திரண்டு  வருவாய்-என்றே
 நம்புகின்றோம் மாமழையை விரைவில்  தருவாய்!!
புலவர்  சா  இராமாநுசம்