Thursday, July 12, 2012

சொல்லில் இன்றைய மனிதநிலை!




போதுமென்ற மனங் கொண்டே
     புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே
    எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே
     தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்
    சொல்லில் இன்றைய மனிதநிலை!

மாறிப் போனது மனிதமனம்
     மாறும் மேலும் மனிதகுணம்
ஊரும் மாறிப் போயிற்றே
    உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்
    பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை
    இதுதான் இன்றைய மனிதநிலை!

மேடையில் ஏறினால் ஒருபேச்சே
    மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
    ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
    வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
     குணமே இன்றைய மனிதநிலை!

பற்று பாசம் எல்லாமே
     பறந்தது அந்தோ! இல்லாமே
சுற்றம் தாழல் சொல்லாமே
     சொன்னது போனதே நில்லாமே
முற்றும் துறந்தது கபடமென
     முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை
   காண்பதே இன்றைய மனிதநிலை!

                        புலவர் சா இராமாநுசம்

Monday, July 9, 2012

என்னுடைய வெளிநாட்டு, சுற்றுப் பயணம்







   அன்பின் இனிய உறவுகளே!
                                                      வணக்கம்

                   அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பின்
சார்பாக, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர்  ஆகிய நாடுகளுக்குச் (குழுவாக)
செல்ல திட்டமிட்டு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

            அதில் நானும் கலந்து கொள்கிறேன்

            பயண,திட்டம் மேலே தரப்பட்டுள்ளது. தங்கும்  நாட்கள் பற்றி விபரம்.
                      பட்டயா- 21, 22 தேதிகள்
                      பாங்காக்-23, 24   தேதிகள்
                      மலேசியா-25,26,27 தேதிகள்
                      சிங்கப்பூர்-28,29 30 தேதிகள்

     மேற் கண்ட நாடுகளில் உள்ள பதிவர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அவர்கள் தொலை பேசி எண்களை
எனக்கு உடன் தெரிவிக்க வேண்டுகிறேன்

                         சா இராமாநுசம்



                                

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...