Friday, August 24, 2012

இருகை கூப்பி தொழுகின்றேன்-என் இதயத்துள் குமுறி அழுகின்றேன்

அன்பின் இனிய உறவுகளே-தினம்
    அலைவழி காணும் உறவுகளே
துன்பில் துடித்தேன் சிலநாளாய்-எனை
    துளைத்திட வேதனை கூர்வாளாய்

இருகை கூப்பி தொழுகின்றேன்-என்
   இதயத்துள் குமுறி அழுகின்றேன்
ஒருகை தட்டின் இலையோசை-இதை
   உணர்ந்திட வேண்டுதல் என்னாசை

பலநாள் முயற்சியே சந்திப்பாம்-அதில்
  பழுதெனில் வருவது நிந்திப்பாம்
நலமுற வேண்டுவ ஒற்றுமையே-உடன்
  நமக்குள் களைவோம் வேற்றுமையே

நடந்தது நடந்ததாய் போகட்டும்-இனி
  நடப்பது நலமாய் ஆகட்டும்
கடந்ததை பேசிட வேண்டாமே-மன
  காயத்தை மேலும் தூண்டாமே

வருவீர் அனைவரும் ஒன்றாக-தமிழ்
  வலைப்பதி குழுமம் நன்றாக
தருவீர்! வாய்ப்பு உறவுகளே-சிரம்
  தாழ வேண்டுவேன் உறவுகளே

சிறுதுளி வெள்ளமாய் போயிற்றாம்-சென்னை
  செயல்மறவர் தம்கைப்பட ஆயிற்றாம்
வருவது ஒன்றே உம்பணியாம்-உமை
  வாழ்த்தி வணங்குதல் எம்பணியாம்

                              புலவர் சா இராமாநுசம்
 

Wednesday, August 22, 2012

பதிவர்கள் பெயர் பட்டியல் -சென்னை சந்திப்பு



பதிவுலக நண்பர்களே, வணக்கம்.

வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்த பதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..

பதிவர் பெயர் விபரங்கள் :

கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
ரேகா ராகவன்,சென்னை
கேபிள் சங்கர்,சென்னை
உண்மைத்தமிழன் ,சென்னை
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்
னை
அகரன்(பெரியார் தளம்) சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
மென்பொருள்பிரபு,சென்னை
அமைதி அப்பா,சென்னை
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
சைத அஜீஸ்,துபாய்
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்




மூத்த பதிவர்கள்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
ரேகாராகவன்,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை

கணக்காயர்,சென்னை


கவியரங்கில் பங்குபெறுவோர்

சசிகலா(தென்றல்)சென்னை
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை

மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்


நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பேயர் குடக்காமல் இருந்தாலோ உடனடியா கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

மதுமதி - 9894124021 begin_of_the_skype_highlighting FREE 9894124021 end_of_the_skype_highlighting
பாலகனேஷ் - 7305836166 begin_of_the_skype_highlighting FREE 7305836166 end_of_the_skype_highlighting
சிவக்குமார் - 9841611301 begin_of_the_skype_highlighting FREE 9841611301 end_of_the_skype_highlighting


மின்னஞ்சல் முகவரி
kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

நன்றி
          புலவர் சா இராமாநுசம்

Monday, August 20, 2012

பதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி!நன்றி!

என்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான்
    எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே
நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும்
    நலம்பெற பல்வேறு வழிகள் நாட
தன்னலம் இல்லாது ஓடி வந்தார்-இன்று
    தடையற்று ஆதரவு மிகவே தந்தார்
அன்னவர் கரம்பற்றி போற்று கின்றேன்-அவர்
    அன்புக்கு அடிமைநான் சாற்று கின்றேன்

விருந்துண்டு வாழ்கின்ற வயதாஇல்லை!-நாளும்
    
விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!
மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்
    
மனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே!
இருந்துண்டு இயன்றவரை சங்கப் பதிவை- பற்றி
     
எழுதினேன்! வலைதன்னில்! எனினும்முதுமை
பெருந்தொண்டு செய்திட தடையாம் ஆமே!-எனவே
    
பொறுப்பேற்பீர்! தக்கோரே! வருக! வருக!

தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும்
     
தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட
சங்கத்தால் ஆகுமென முன்னோர் சாற்ற-அவை
    
சரியென்றே கொண்டதுடன் பின்னோர் போற்ற
அங்கங்கே தொழில்தோறும் சங்கம் தோன்ற-நல்
    
அடிப்படை உரிமைகள் மனதில் ஊன்ற
சிங்கத்தைப் போன்றின்று நடக்கக் காண்பூர்-உம்
    
சிந்தையிலும் அதுபோன்றே உறுதி பூண்பீர்

தன்நலமே இல்லாமல் சேவை செய்ய-கொள்கைத்
    
தடுமாற்றம் இல்லாமல் அன்பைப் பெய்ய
பொன்மனமே கொண்டவரே வருக! வருக-நல்
    
பொதுநலமே சேவையெனத் தருக! தருக!
எத்தனைப்பேர் வருவார்கள் தெரிய வில்லை-ஆனால்
    
ஏற்றயிடம் உறுதிசெய்தே விட்டோம் ஒல்லை
சித்தமதைவருகைதனைச் செப்ப வேண்டும்!-உடன்
    
செயல்பட அதுவொன்றே எம்மைத் தூண்டும்!

                                       
புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...