தாங்காது  தாங்காது 
இயற்கைத்   தாயே –உடன்
      தடுத்திடு   வாராமல்  
தொத்து  நோயே
தூங்காத  விழியிரண்டின் 
துணையக்  கொண்டும் விரைந்து
       தொலையாத 
இரவுயென  துயரம்   மண்டும்
நீங்காத  என்றேதான் 
நாளும்  பொழுதும்-அந்தோ
       நிலையான 
நிலையாலே நெஞ்சுள்  அழுதும்
தேங்காது  கண்ணீரும் 
சிந்து  கின்றோம்  -இயற்கைத்
      தேவியேயுன் திருவடி  தொழுது 
நின்றோம்!
புலவர்  சா  இராமாநுசம்