ஒப்புக்கே தீர்மானம் ஒபாமா கொண்டுவர
செப்பிக்க ஆதரவும்
செப்பியது இந்தியா
உப்புக்கும்
உதவாத ஒன்றலவா அதுவும்
தப்பிக்க மாற்றுவழி
தமிழர்களே காணுங்கள்!
ஓரங்க
நாடகத்தை ஒருவழியாய் அனைவருமே
பேரங்கம்
தன்னில் பேசிமுடித் துவிட்டார்
ஊரெங்கும்
ஊர்வலமே உண்ணா விரதமென
யாரிங்கே
செய்யினும் என்னபயன் தனித்தனியே!
உள்ளத் தூய்மையுடன் ஒன்றுபட்ட நிலையுண்டா
கள்ள நினைவுடனே கைகோர்க்கும்
செயல்தானே
தெள்ளத்
தெளிவாகத் தெரிகிறது கண்டோமே
வெள்ளம்போல்
மாணவர்கள் வீறுகொண்ட பின்னாலும்!
செம்புல நீராக செயல்படுவாய்
தமிழினமே
வன்புல வடநாடு
உணரட்டும் மிரளட்டும்
உன்பலம் அறியட்டும் ஒன்றுபடு!
ஒன்றுபடு!!
தம்பலம் காட்டியே
தமிழனே வென்றுவிடு!!
புலவர் சா இராமாநுசம்

