காட்டைத் திருத்தி நல்கழனி ஆக்கி-தினம்
காலையும் மாலையும் சென்று வந்தோன்
காலையும் மாலையும் சென்று வந்தோன்
வீட்டை மகிழ்சியில் ஆழ்த்தி டவே-தை
விரைகுது பொங்கலோ பொங்க லடா
விரைகுது பொங்கலோ பொங்க லடா
கூட்டாளி மாட்டுக்கும் பொங்க லிட்டு-கை
கும்பிட வந்திடும் தைத் திருநாள்
கும்பிட வந்திடும் தைத் திருநாள்
பாட்டாளி போற்றிடும் மேதினம் போல்-இந்த
பாரெல்லாம் கொண்டாடச் செய்திடு வோம்
பாரெல்லாம் கொண்டாடச் செய்திடு வோம்
வந்தது வந்தது பொங்க லடா-உழவர்
வாழ்வினில் வறுமையே தங்க லடா
வாழ்வினில் வறுமையே தங்க லடா
தந்தது உணவன்றோ உயிர்கள் வாழ-நாம்
தந்ததோ அவரில்லம் துயரம் சூழ
தந்ததோ அவரில்லம் துயரம் சூழ
வெந்தது தானே உள்ள நிலை-அவர்
வேதனை நீக்குவார் யாரும் இலை
வேதனை நீக்குவார் யாரும் இலை
சிந்தனை உடன்செய்ய வேண்டு மடா-எனில்
செத்து மடிவது உறுதி யடா
செத்து மடிவது உறுதி யடா
உழுது உழுது அலுத்த வனே-நாளும்
உதிரிப் பூவாக ஆகிவிட் டான்
உதிரிப் பூவாக ஆகிவிட் டான்
அழுது அழுது வடித்த கண்ணீர்-நீர்
ஆவி ஆனது வெம்மை யிலே
ஆவி ஆனது வெம்மை யிலே
தொழுது வணங்க வேண்டி யவன்-கை
துவளவும் நாளை மடங்கி விடின்
துவளவும் நாளை மடங்கி விடின்
பழுது வந்திட உலக மெங்கும்-அழி
பசியோடு பஞ்சமே என்றும் ஓங்கும்
பசியோடு பஞ்சமே என்றும் ஓங்கும்
அல்லும் பகலுமே பாடு பட்டே-உழவன்
அயராது சேர்த்திட்ட பொருளின் விலை
அயராது சேர்த்திட்ட பொருளின் விலை
சொல்லும் நிலைமட்டும் அவனுக் குண்டா-என
சொல்லுங்கள் யாரேனும் இன்று வரை
சொல்லுங்கள் யாரேனும் இன்று வரை
கொல்லும் பசிப்பிணி மருத் துவனே-அவன்
குமுறும் உள்ளத்தை அறிந்திடு வீர்
குமுறும் உள்ளத்தை அறிந்திடு வீர்
ஒல்லும் வழிதன்னை காண்பது தான்–உடன்
உண்மையில் அரசாள தேவை ஆகும்
உண்மையில் அரசாள தேவை ஆகும்
| Tweet |



