Tuesday, February 21, 2012

தமிழ்வழி என்றும் போற்றுகின்றேன!

நேற்றே எழுதிட முயன்றேனே-நிகழ்சி
  நிறைவால் அயர்ந்து துயின்றேனே
ஏற்றே அழைப்பை வந்தார்கள்-எனக்கு
  எல்லையில் மகிழ்வே தந்தார்கள்
போற்றத் தக்கவர் அன்னாரே-மேலும்
   புகழ்ந்து என்னையும் சொன்னாரே
ஆற்றல் மிக்கவர் அன்பாலே-எனக்கு
   அளித்தார் பெருமை பண்பாலே

அன்னைத் தமிழின் கொடையாலே-வலை
   அறிமுகம்! கவிதை நடையாலே
சென்னைப் பித்தனும் வந்தாரே!-மகள்
   ஸ்ரவாணி, துணைவரும் வந்தாரே!-
மின்னல் வரிகள் கணேசும்-மிகவும்
  முன்னரே வருகை தந்தாரே
கன்னல் சுவையது எனக்கன்றோ-மனக்
   கண்ணில் மறையா நிலையன்றோ!

வலைவழி வாழ்த்திய பலருக்கும்-நேரில்
   வந்து வாழ்த்திய மூவருக்கும்
அலைவழி வாழ்த்தி நன்றியென-என்
   அன்பும் வணக்கமும் என்றுமென
தலையது தாழச் சாற்றுகின்றேன்-கற்ற
  தமிழ்வழி என்றும் போற்றுகின்றேன
நிலையில் உலகில் என்பெயரும்-நூல்
  நிலைத்திட வாழும் என்பெயரும்!

      நன்றி!  நன்றி!   நன்றி!  

                புலவர் சா இராமாநுசம்   
  


16 comments :

 1. எனக்கு
  எல்லையில் மகிழ்வே தந்தார்கள்
  மகிழ்ச்சி ஐயா. எங்களால் அங்கு வர இயலவில்லையே தவிர . தங்களின் தமிழ் ஆர்வத்திற்கு எங்களது வணக்கங்கள் .

  ReplyDelete
 2. அப்பா ,
  விழா ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்தன.
  சித்ரா அவர்கள் நிகழ்ச்சியைப் பாங்குற நடத்திச் சென்றார்கள்.
  தங்கள் கவிதைகளைக் கணினியில் படிப்பதை விட
  கையில் புத்தகமாக ஏந்திப் படிப்பது ஒரு
  இனிய அனுபவம். இந்த விழா ஒரு இனிய மாலையையும் ,
  பல நல்ல உள்ளங்களின் சந்திப்பையும் நீங்காத நினைவுகளையும்
  தந்து விட்டுச் சென்றது. பிரமாதம்.
  அதைப்பற்றிய தங்கள் வர்ணனைக் கவிதையும் அருமை.
  நன்றி .

  ReplyDelete
 3. புலவர் பெருந்தகையே,
  விழா சிறப்புற நடந்தமை
  மனதிற்கு மகிழ்ச்சி. விழாவிற்கு
  வரமுடியாது போனதற்கு வருந்துகிறேன்.
  என்னைப்போல வெளிநாடுகளில் பணிபுரியும்
  அன்பர்களுக்கு உண்டான நிதர்சனம இது.

  தங்களின் தமிழ்ப் பணி சிறக்க மென்மேலும்
  தமிழன்னையின் பெருமைகளை உயர்த்த
  அன்னைத் தமிழ் வாழ்த்தட்டும்.

  ReplyDelete
 4. விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது எனது நல்லூழ்! சிறப்பாக நடந்த விழாவில் முடியும் வரை இருக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தமே.விழா பற்றிய பா அருமை.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 5. விழா இனிதே நிறைவு பெற்றதற்கும், அதைப்பற்றிய “பா” வுக்கும் வாழ்த்துகள். பாராட்டுக்கள். நன்றிகள்.

  தங்களின் தமிழ்பணிகள் மேலும் மேலும் சிறக்க இறைவன் அருள் புரியட்டும்.

  ReplyDelete
 6. அன்புள்ள புலவரே, விழா இனிதே நடந்தது குறித்து சென்னைபித்தன் மற்றும் கணேஷ் அவர்களின் வலைப்பூக்களில் படித்து அறிந்தேன்...

  இப்போது உங்கள் பக்கத்திலும் ஒரு பா! வாழ்த்துகள்...

  புத்தகம் எங்கு கிடைக்கும், இணையம் மூலம் வாங்க இயலுமா என்ற விவரங்கள் சொல்லுங்களேன்...

  ReplyDelete
 7. ஐயா... எனக்குத் தந்தை போன்ற தாங்கள் மகனே என விளித்ததில் அகமகிழ்வெய்தி நிற்கிறேன். விழாவில் கல்ந்து கொண்டதையும் பல நல்லறிஞர்களைத் தெரிந்து கொண்டதும் என் பாக்கியமெனவே கருதுகிறேன். சரியான நேரத்துக்கு வருவதும் முழுமையாக விழாக்களில் இருப்பதும் வழக்கமாகக் கொண்ட நான் நம் விழாவில் முழுதாய் இருக்க இயலாது போனதொன்றே என் வருத்தம். மற்றபடி மனதெல்லாம் மகிழ்வே. புத்தகக் காதலனான நான் மேலும் பல புத்தகங்கள் தங்களிடமிருந்து வரவும் நான் படித்து மகிழவும் இறையை வேண்டி வாழ்த்துகிறேன் தங்களை.

  ReplyDelete
 8. நானும் வலைப்பூவின் வழியே தங்கள் புத்தக வெளியீடு தொடர்பான பதிவை பார்த்து ரசித்தேன்.
  மனமார வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 9. ஐயா..விழாவில் கலந்து கொள்ள உண்மையில் நினைத்தேன்.முடியாமல் போய்விட்டது.மன்னிக்கவும். செ.பி. மற்றும் கணேஷ் அவர்களின் தளங்களின் தளங்களின் வாயிலாக செய்தி கண்டேன்..அக மகிழ்ந்தேன்..

  ReplyDelete
 10. வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் எனக்கும் பெருமை ஐயா.
  புத்தக விவரங்களை வெளியிடுங்கள். நன்றி.

  ReplyDelete
 11. சிறப்பாக நிகழ்வுகள் நடந்தது குறித்து
  மிக்க மகிழ்ந்தோம்
  இந்த விழா கொடுத்த ஊட்டத்தில் இன்னும்
  சிறப்பான கவிதைகளைப் பெற இருக்கிற
  நாங்கள் நிச்ச்யம் பாக்கியசாலிகள்

  ReplyDelete
 12. விழா சிறப்பாக நடந்தமைக்கு மகிழ்ச்சி ...தொடர்க தங்கள் கவிதைப் பணி......

  ReplyDelete
 13. திரு .விமலன் அவர்கள் இரண்டாவது முறையாக தென்றலுக்கு பகிர்ந்த விருதை தங்களுக்கு பகிர்ந்துள்ளேன் . தென்றலுக்கு வருகை தரவும் .

  ReplyDelete
 14. விழா சிறப்பாக நிறைவுற்றதற்கும், அதை இன்னும் சிறப்பாகப் பாவில் வடித்த அழகுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ஐயா. தொடர்ந்து எழுதுங்கள். புத்தங்கள் வாயிலாய்த் தமிழும் தங்கள் புகழும் என்றென்றும் இப்பூமியில் நிலைத்திருக்கட்டும்.

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...