Friday, July 6, 2012

இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன் இதயம் திறக்க மறுக்கின்றாள்


தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில் 
தொல்லையா இன்பம் தந்ததுவே 
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை 
கண்முன காணா ஏக்கந்தான் 
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள் 
விட்டுச் சென்றதை நினவுதர 
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக 
அழகில் காண்பது மிகநாணே 

என்னுள் அவளே இருந்தாலும்-நல் 
இருவிழி தந்திடும் மருந்தாலும் 
பொன்னுள் பதித்த மணிபோல-தினம் 
புலம்பும் நெஞ்சின் பிணிமாள 
மன்னும் உயிரும் உடலோடு-அவள 
மறுத்தால வாழ்வே சுடுகாடே 
இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன் 
இதயம் திறக்க மறுக்கின்றாள் 

எத்தனை காலம் ஆனாலும்-என் 
இளமை அழிந்து போனாலும் 
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம் 
செப்பிடும் வரையில் தூங்காது 
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான் 
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன் 
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா 
பழியும் வருமே வாய்திறவாய் 

புலவர் சா இராமாநுசம்

33 comments :

  1. //பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
    பழியும் வருமே வாய்திறவாய் //

    புலவரும் காத்துக் கொண்டு இருக்கிறாரோ

    த ம 1

    படித்துப் பாருங்கள்

    சென்னையின் சாலை வலிகள்
    seenuguru.blogspot.com/2012/07/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன!

      Delete
  2. எத்தனை காலம் ஆனாலும்-என்
    இளமை அழிந்து போனாலும்
    சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
    செப்பிடும் வரையில் தூங்காது//

    அன்பின் ஆழம் சொல்லும் அழகான வரிகள்
    மனம் கவர்ந்த் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அழகான வரிகள் ஐயா...
    தொடருங்கள்...த.ம..4

    ReplyDelete
  4. செப்பிடும் வரையில் தூங்காது
    இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
    இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
    பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
    பழியும் வருமே வாய்திறவாய்
    அன்பின் வரிகள் அழகு ஐயா. மீண்டும் மீண்டும் படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன!

      Delete
  5. புலவன் நெஞ்சப் புலம்பல்கள்
    புதுமை புவாய்க் கமழ்கிறது!
    பலபண் பாக்கள் படைத்திருந்தும்
    பதுமைத் தமிழே அதிலிருந்தாள்!
    நிலவும் இந்தக் காலத்தில்
    நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த
    நிலவுப் பெண்தான் யாரவளோ..
    நினைத்து எழுதும் சீர்தமிழால்!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன!

      Delete
  6. புலவன் நெஞ்சப் புலம்பல்கள்
    புதுமை பூவாய்க் கமழ்கிறது!
    பலபண் பாக்கள் படைத்திருந்தும்
    பதுமைத் தமிழே அதிலிருந்தாள்!
    நிலவும் இந்தக் காலத்தில்
    நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த
    நிலவுப் பெண்தான் யாரவளோ..
    நினைத்து எழுதும் சீர்தமிழால்!!

    ReplyDelete
  7. அருமை ஐயா...மனம் ஒரு ந◌ாள் நிறையும் ஐயா..வாழ்த்துக்கள்.
    சந்திப்போம் சொந்தமே..!
    http://athisaya.blogspot.com/2012/07/blog-post.html

    ReplyDelete
  8. எத்தனை காலம் ஆனாலும்-என்
    இளமை அழிந்து போனாலும்
    சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
    செப்பிடும் வரையில் தூங்காது//

    அழகான வரிகள்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன

      Delete
  9. மரபுக் கவிதையில் காதல் மணக்கிறது.
    த.ம.7

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன

      Delete
  10. மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன

    ReplyDelete
  11. மிக அழகான வரிகள் (TM 9)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன

      Delete
  12. ஆஹா ... அருமை ! நல்ல வரிகள் ஐயா ! நன்றி ! வாழ்த்துக்கள் ! (TM 10)

    ReplyDelete
  13. ayya!!

    chaance illai mika rasithen!

    ReplyDelete
  14. அழகான கவிதை. ரொம்பப் பிடிச்சிருக்கு ஐயா எனக்கு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன

      Delete
  15. கருத்து செறிந்த கவிதை. சிந்திக்க சுவையான உணர்வை ஏற்படுத்துகிறது! அற்புதம்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன

      Delete
  16. அருமை அருமை..

    தங்கள் கவிதையும் வலை வடிவமைப்பும்.

    தனிடொமைனுக்கு http://www.pulavarkural.info/ மாறியமைக்கு வாழ்த்துக்கள் புலவரே.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன

      Delete
  17. இப்பதிவு என் கண்ணில் படவேயில்லையே..முதல் நான்கு வரிகள் மிகவும் என்னை கவர்ந்தது ஐயா..

    "தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
    தொல்லையாய் இன்பம் தந்ததுவே
    கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
    கண்முன காணா ஏக்கந்தான்"
    அருமை..

    kavimadhumathi@gmail.com

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன

      Delete
  18. தூய அன்பின் வெளிப்பாடு.அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன

      Delete
  19. கவிதையை இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன

      Delete
  20. // எத்தனை காலம் ஆனாலும்-என்
    இளமை அழிந்து போனாலும்
    சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
    செப்பிடும் வரையில் தூங்காது // காதலின் உணர்வுகளை ஒரு காவிய நாயகனை போல அழகாக வெளிப்படுத்தி இருக்கீங்க .........ரசித்தேன்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...