Monday, October 19, 2015

இன்றேதான் என்னுடைய பிறந்த நாளாம் இணையவழி வாழ்த்தநீர் சிறந்த நாளாம்!


இன்றேதான் என்னுடைய பிறந்த நாளாம்
இணையவழி வாழ்த்தநீர் சிறந்த நாளாம்
ஒன்றேதான் உறவுகளே அன்புப் பரிசாம்
உள்ளத்தில் இன்பமதைக் கொட்டும் முரசாம்
என்றேதான் இதயமதில் எண்ணம் கொண்டே
இயன்றவரை கருத்துக்களை வலையில் விண்டே
நன்றேதான் வாழுவரை பதிவைத் தருவேன்
நல்லோரே! உம்முடைய வலைக்கும் வருவேன்


எத்தனையோ எழுதிவிட நினைத்த போதும்
இயலாத நிலைதந்து முதுமை மோதும்
சித்தமதில் தோன்றுவன சிதறிப் போகும்
செயலிழந்த மனநிலையால் துயரே ஆகும்
பெத்தமனம் பிள்ளைகளின் அன்பைத் தானே
பெருமைமிக எதிர்நோக்கும் அதுபோல் நானே
இத்தனைநாள் நான்வாழ மருந்தாம் நீரே
இனிமேலும் வளர்கின்ற உறவாம் நீரே!

புலவர் சா இராமாநுசம்

54 comments :

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. வாழ்த்துகள் அய்யா. மாலையில் பேசுகிறேன்.

    ReplyDelete
  3. என் வாழ்த்துகள் அய்யா.

    உடன் பிறவா அண்ணன் உயர்திரு புலவர் இராமானுசம்
    அவர்கள் பிறந்த நாள் இன்று. அவரது பாடலாம் வேங்கடவனை வேண்டும் பாடல் அதைப் பாடி அவரது ஆசிகள் பெறுவோம்.
    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  4. அன்புள்ள பெரும் புலவரே!

    ’இன்று பிறந்த நாள் ... பிள்ளைகள் போலத் தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்...! ’வாழ்க! பல்லாண்டு வளமும் நலமுடன்!

    நன்றி.
    த.ம.2

    ReplyDelete
  5. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் அய்யா! புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பினில், நான் உங்களைச் சந்தித்தது போல, அடுத்த சந்திப்பிலும் உங்களை நான் சந்திக்க இறையருள் தர வேண்டும்.


    ReplyDelete
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  8. "பிறந்தநாள், இன்று பிறந்தநாள், நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்.....HAPPY BIRTHDAY 2" புலவர் திரு. இராமாநுசம் அவர்களே,.... தாங்கள் மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று, சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்......http://youtu.be/i-jlk4dEFLY ...."கோகி-ரேடியோ மார்கோனி"

    ReplyDelete
  9. அன்பு ஐயாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களை விட வயதில் சிறியவன் வயதுகளின் பரிணாமம் என்னும் பதிவு எழுதி இருந்தேன் சுட்டி தருகிறேன் நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள் நன்றி
    http://gmbat1649.blogspot.in/2015/08/blog-post_26.html

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  11. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ஐயா!

    இணையவழி வந்த அன்பு உறவுகள்தாம் நாமெல்லோரும்!
    என் தந்தைபோலும் நீங்கள்! என்றென்றும் உங்கள்
    நலனுக்காக வேண்டல்கள் செய்வேன்!

    வணக்கமுடன் வாழ்த்துக்கள் ஐயா|!

    ReplyDelete
  12. உங்களுடைய பிறந்த நாளில் நீங்கள் எல்லா நலனும் பெற்று நீடுழி வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். தங்களின் வாழ்த்துக்களும், பதிவுகளும் எங்களை மென்மேலும் பக்குவப்படுத்தும். நன்றி.

    ReplyDelete
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா. என்றென்றும் இளைஞராய் இணையத்தில் வர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.முழு உடல் நலத்துடன் நீண்டநாள் வாழ்ந்து அனைவரையும் வழி நடத்த இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  15. மனம் நிறை வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  16. அய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
    த ம 12

    ReplyDelete
  17. வாழ்த்த வயதில்லை (மனம் இருக்கு ) வணங்குகிறேன் அய்யா :)

    ReplyDelete
  18. மனமார்ந்த இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துக்கள் ஐயா
    நன்றி
    தம 14

    ReplyDelete
  19. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் ஐயா,
    உடல் சார்ந்த இடர்பாடுகள் இருந்தபோதிலும் ஆர்வத்துடன் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டது வியக்க வைத்தது ஐயா. தங்கள் அனுபவக் கருத்துகளும் கவிதைகளும் எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்.

    ReplyDelete
  21. மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  22. வாழ்த்தும் வயதில்லை... வணங்குகிறேன் ஐயா...
    வளமும் நலமும் பெற்று வாழ் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ஐயா....

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  25. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  26. தாமதமாக வந்து வாழ்த்துவதற்கு மன்னிக்கவும். தாங்கள் எல்லா நலமும் பெற்று நீடூழி வாழ விழைகின்றேன் ஐயா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...