Wednesday, October 19, 2011

இன்றென் பிறந்த நாளாகும்

 
 எட்டுப் பத்தென  வயதாகும்-ஐயா
   இன்றென் பிறந்த நாளாகும்
பட்டுப் பட்டே பதப்பட்டேன்-துன்பம்
   பட்டே நானும் சுகப்பட்டேன்
தொட்டுத் தாலி கட்டியவள்-நெஞ்சில்
   துயரத் தீயை மூட்டுயவள்
விட்டுச் சென்றது ஒன்றேதான்-என்றும்
   விலகா வேதனை அன்றோதான்

வையம்  தன்னில் வாழ்வாங்கு-நான்
   வாழ்ந்த வாழ்வு மனமோங்க
பொய்யும் புரட்டும் இல்லாமல்-பிறர்
   புறத்தே எதுவும் சொல்லாமல்
ஐயன் வகுத்த வழியென்றே-முடிந்த
   அளவில் நானும் பழியின்றே
செய்யும் பணிகளைச் செய்தேனே-நட்பே
   சிறப்பென அன்பைப் பெய்தேனே

சிதலைத் தின்ற ஆல்போல-அடி
   சிதைய அந்தோ! நாள்போல
மதலை விழுதே தாங்குமன்றே-பெற்ற
   மகளீர் என்னையும் அதுபோன்றே
இதமாய் நாளும் தாங்கிடவே-வற்றா
   இளமை மனதில் தேங்கிடவே
பதமாய் நடந்தே வாழ்கின்றேன்-கவிதை
   படைப்பதே பணியெனச் சூழ்கின்றேன்

வலையில் கவிதைப் படிப்பவரே-எனை
   வாழ்த்திக் கருத்தும் கொடுப்பவரே
அலையில் பட்ட துரும்பாக-ஓர்
   ஆலையில் பட்டக் கரும்பாக
நிலையில் மனதும் நிலையாக-பெரும்
   நிம்மதி! துயரம் அதுபோக
விலையில் பாசப் பந்தங்களே-உம்மால்
   விளைந்தது! நன்றி! சொந்தங்களே

                         புலவர் சா இராமாநுசம்

76 comments :

 1. "நூறாண்டு காலம் வாழ்க
  நோய் நொடி இல்லாமல் வளர்க
  ஊராண்ட மன்னர் புகழ் போலே
  உலகாண்ட தமிழர் புகழ் போலே "
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ இந்த சகோதரனின் வாழ்த்துக்கள் ஐயா....

  ReplyDelete
 3. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் புலவரே...

  ReplyDelete
 4. நீங்கள் பல்லாண்டுகள் வாழ்ந்து... நீங்கள் காதலிக்கும் கவிதைகள் என்றுமே அழியாத படைப்புகளாக வாழ வாழ்த்துக்கள் புலவர் ஐயா

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்! புலவரே அன்பரே... மனதில் மகிழ்ச்சியே குடிகொண்டிருக்கட்டும்... வணங்கி வாழ்த்துகிறேன்.....

  ReplyDelete
 6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா .

  த.ம. 3

  ReplyDelete
 7. புலவர் ஐயா பல்லாண்டு குன்றாத மகிழ்ச்சியும் குறையாத உற்சாகமும் கொண்டு வாழ எனது வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. ஏற்றமிகு தோற்றமாய்
  எழில்மிகு வண்ணமாய்
  இனிக்கவி படைப்பவரே..
  இன்னும் பல்லாண்டு
  வாழ்ந்திட இறைவன் அருள்புரிவான்..
  எம் வாழ்நாள் முழுதும்
  உம்கவியை தரிசிக்க
  இறைவனை இறைஞ்சுகிறேன்..

  வாழ்த்த வயதில்லை ஐயா
  வணங்குகிறேன்..

  ReplyDelete
 9. பல்லாண்டு காலம் நோய்நொடி ஏதும் இன்றி மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்...

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் வழங்கிட வயதில்லை
  வணங்குகிறேன் அய்யா
  /பட்டுப் பட்டே பதப்பட்டேன்-துன்பம்
  பட்டே நானும் சுகப்பட்டேன்/
  உண்மை அய்யா, நாங்களும் பதப்பட
  முயற்சிக்கிறோம்.
  முடியாமல் தவிக்கிறோம்.
  முதுமை கூடினால் தான் பக்குவமும் வருமோ!

  ReplyDelete
 11. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா. என்னிலும் மூத்த தங்களை வணங்கி இறைவனை என்றும் நலமே நல்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 12. தங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை என்றாலும்
  என் தமிழுக்கு வயதுண்டு...


  வாழ்க தமிழுடன்!
  வளர்க கவியுடன்!


  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா..

  ReplyDelete
 13. ஜயா உங்கள் வயதில் கால்வாசிதான் எனக்கு உங்களை வாழ்த்த எனக்கு தகுதியிருப்பதாக நான் நினைக்கவில்லை...

  இந்த சின்னவனின் வாழ்த்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜயா

  ReplyDelete
 14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

  தாங்கள் வாழ்வாங்கு வாழ்ந்து தொடர்ந்து தமிழுக்கு தொண்டாற்ற இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்

  வாழ்த்துக்களுடன்
  சம்ப்த்குமார்

  ReplyDelete
 15. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமும்,குறையாத செல்வமும் பெற்று வளமான தாய்த்தமிழுக்குத் தொண்டு செய்ய வைகுண்டநாதன் அருள் புரியட்டும்.வணங்குகிறேன்.

  ReplyDelete
 16. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ...

  ReplyDelete
 17. இன்னும் ஒரு வருடம் இளமையாகி இருக்கிறீர்களா? சபாஷ்

  ReplyDelete
 18. அழகுத்தமிழ்ப்பாக்களால்
  எம் அகங்குளிரச் செய்கிறீர்,
  தமிழுள்ளவரை தங்கள் பெருமை
  தரணியிலே நிலைத்திருக்கும்,
  வாழிய நீவிர் பல்லாண்டு,
  வாழிய உமது தமிழ்த்தொண்டு!

  ReplyDelete
 19. NAMASKARAMS.

  BEST WISHES FOR YOUR HAPPY BIRTH DAY.

  PRAYING FOR MANY MORE HAPPY RETURNS OF THE DAY.

  Tamilmanam 13 vgk

  ReplyDelete
 20. புலவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 21. புலவர் ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பலகவிதைப்பாக்களை நாளும் தரவேண்டும்.

  ReplyDelete
 22. வணக்கம் ஐய்யா
  தங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் நீடூடி வாழ்ந்து தமிழுக்கு சேவை செய்ய அந்த வேங்கடவன் அருள் புரியட்டும்..

  ReplyDelete
 23. வணக்கம் ஐயா,
  நலமா?
  அகவை எண்பதில் காலடி எடுத்து வைக்கும் உங்களை அடியேன் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்துவதில் மகிழ்வடைகின்றேன்.

  ReplyDelete
 24. வணக்கம் ஐய்யா
  தங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் "நூறாண்டு காலம் வாழ்க
  நோய் நொடி இல்லாமல் வளர்க

  ReplyDelete
 25. பல்லாண்டுகள் வாழ்ந்து
  எங்களுக்கு தமிழமுது
  தினம் பருகத்தந்து
  இன்புற்றிக்க வாழ்த்தி வணங்குகிறேன்!

  ReplyDelete
 26. புலவர் ஐயாவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 27. புலவர் ஐயா பல்லாண்டு வாழ எனது வாழ்த்துகள்

  ReplyDelete
 28. 80...வாழ்த்த எனக்கு வயதில்லை... வணங்குகிறேன் புலவரே...

  Many more Happy Returns of the Day.

  ReplyDelete
 29. பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலவரே! திடகாத்திரமான உடலுடன் நீடூடி வாழ்க!!

  ReplyDelete
 30. தமிழ் வாழ நீவீர் நீடு வாழ வேண்டும்

  ReplyDelete
 31. ஐயாவுக்கு...இன்னும் நிறைவான சுகமான வாழ்வுக்கு என் வாழ்த்துகள் !

  ReplyDelete
 32. நல்ல ஆரோக்கியமுடன் தமிழ் பணி செய்து மனம் போல் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 33. Ramani said.

  நன்றி சகோ!

  முதல் வரவுக்கும் ஓட்டளிப்புக்கும்
  விரிவான வாழ்த்துக்கும்
  சற்று முதுகு வலி உடன் நன்றி
  தெரிவிக்க இயவில்லை

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 34. மாய உலகம் said...

  ஓட்டளிப்புக்கும்
  விரிவான வாழ்த்துக்கும் நன்றி சகோ!
  சற்று முதுகு வலி உடன் நன்றி
  தெரிவிக்க இயவில்லை

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 35. மாய உலகம் said

  நன்றி சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 36. மாய உலகம் said

  நன்றி சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 37. மாய உலகம் said

  நன்றி சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 38. M.R said..

  ஓட்டளிப்புக்கும்
  விரிவான வாழ்த்துக்கும் நன்றி சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 39. சேட்டைக்காரன் said.

  ஓட்டளிப்புக்கும்
  விரிவான வாழ்த்துக்கும் நன்றி சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 40. மகேந்திரன் said.

  ஓட்டளிப்புக்கும்
  விரிவான வாழ்த்துக்கும் நன்றி சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 41. இந்த சிறியேனின் வாழ்த்துக்கள் ஐயா ...

  ReplyDelete
 42. வெங்கட் நாகராஜ் said..

  ஓட்டளிப்புக்கும்
  விரிவான வாழ்த்துக்கும் நன்றி சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 43. ennamoetho said.

  முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 44. G.M Balasubramaniam said..

  ஐயா!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 45. முனைவர்.இரா.குணசீலன் said.

  முனைவரே!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 46. K.s.s.Rajh said..

  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 47. சென்னை பித்தன் said.

  ஐயா!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 48. koodal bala said.

  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 49. suryajeeva said.

  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 50. கீதா said..


  சகோதரி!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 51. அருள் said..

  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 52. வை.கோபாலகிருஷ்ணன் said.

  ஐயா!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 53. MANO நாஞ்சில் மனோ said.

  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 54. தனிமரம் said..  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 55. காட்டான் said..

  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 56. நிரூபன் said..

  மகனே!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 57. மாலதி said.


  மகளே!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 58. கோகுல் said..


  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 59. சத்ரியன் said..

  மகனே!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 60. விக்கியுலகம் said.


  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 61. வாழ்த்த வயதில்லை
  பிறந்த நாளில்
  எங்களை வாழ்த்துங்கள்
  உங்கள் பாதம் தொட்டு
  வணங்குகின்றேன் ...

  ReplyDelete
 62. ரெவெரி said..

  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 63. குடிமகன் said..

  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 64. அ. வேல்முருகன் said.

  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 65. ஹேமா said..


  சகோதரி!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 66. kovaikkavi said..

  சகோதரி!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 67. நிகழ்வுகள் said..


  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 68. veedu said..

  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 69. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் புலவர் ஐயா..

  ReplyDelete
 70. பிறந்ததும் செவியில் விழுந்தது தமிழ்
  வளர்ந்ததும் இன்னும் வளர்ப்பதும் தமிழ்
  தமிழென்பது ஒரு சர்க்கரைக்கடல்
  அமிழ்ந்து குளித்துமுத்தெடுக்கமுத்தெடுக்க
  விழுந்துவிடுவதில்லை தமிழ் நம்மை
  வீழ்த்தியும் விடுவதில்லை
  உலகெங்கும் ஒலிக்கும் தமிழுக்கு
  உங்கள் பணி என்றும் தேவை
  வயது உடலுக்குத்தான் மனதிற்கில்லை
  வாழ்த்தவும் வயது ஒரு பொருட்டில்லை
  இன்னும் ஒரு நூற்றாண்டிரும் என்னும்
  ஆன்றோர் வாக்கினையே
  ஆசிகள் வேண்டிதங்களுக்கு அளிக்கிறேன்!

  ReplyDelete
 71. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா!
  வாழ்த்துவீரே!!!

  ReplyDelete
 72. அமைதிச்சாரல் said...

  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 73. சி.பி.செந்தில்குமார் said...  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 74. ஷைலஜா said..

  சகோதரி!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 75. தமிழ் விரும்பி said..

  சகோ!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...