Wednesday, May 13, 2015

சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!



இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    எவரலும் காக்க இயலாது! அன்னோன்
கெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்
    கெட்டவன் அந்தோ! துயரமே படுவான்
துடுப்பதை இழந்திட்ட பரிதாப தோணி
    துணையின்றி தனியாக உள்ளமே நாணி
விடுப்பானே ஆண்டிடும் உரிமையைக் கூட
    வேதனை மண்டியே மனதினில் ஓட

தம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டே
    தன்னரசை நாள்தோறும் நடத்திடக் கண்டே
விம்மிதம் கொள்வாரே மக்களும் அவன்பால்
    விருப்பியே புகழ்வாரே வியந்துமே அன்பால்
இம்மென்றால் சிறைவாசம் ஏன்னெறால் வனவாசம்
    இல்லாது ஆள்கின்ற மன்னர்பால் விசுவாசம்
உம்மென்று இல்லாமல் உவகையில் காட்டுவார்
    ஒருவருக் கொருவர் உற்சாகம் ஊட்டுவார்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தன்
    சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்
அமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்
    ஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்
தமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே
    தக்கது என்பாரே! அறியாராம் கரவே
இமயோரும் காணத இன்பத்தைப் பெறுவர்
    இறைவாநீ என்றுமே மன்னனை தொழுவர்!

பல்லோரின் பகையாலே பாதகம் இல்லை
      பலமிக்க  மன்னர்க்கு வாராது தொல்லை
நல்லோரின் துணையின்றி நாடாள முயலா
      நல்லது கெட்டது அறிந்திட இயலா
வல்லவ ரானாலும் வழிதவறிப் போக
      வாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக
சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே
      பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!
       
                       புலவர் சா இராமாநுசம்

21 comments :

  1. வல்லவ ரானாலும் வழிதவறிப் போக
    வாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக
    சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே
    பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!

    மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. அன்புள்ள அய்யா,




    சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே பெரிது...!
    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    எவரலும் காக்க இயலாது!
    -மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

    நன்றி.
    த.ம. 2.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. பெரியவர்களின் துணை பெரிது பெரிது தான் ஐயா....
    முற்றிலும் உண்மை ஐயா. அவர்கள் தான் பலம் நமக்கு.
    நன்றி
    தம +1

    ReplyDelete
  4. பெரியவர்களின் வழி காட்டல் இல்லையெனில் வாழ்வேது அருமை ஐயா
    தமிழ் மணம் காலையில் முடிந்து விட்டது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. வணக்கம்
    ஐயா
    மூத்தவர் எப்போதும் வழிகாட்டி ... சொல்லிய விதம் நன்று ஐயா. த.ம5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  6. அந்தப் பெரியாரின் துனையால் பலன் அடைந்தவர்கள். இன்று அந்தப்பெரியாரை சாதிய வலையத்துக்குள் புகுத்தி பெருமை அடைகிறார்கள் அய்யா...

    ReplyDelete
  7. வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  8. மூத்தோரின் செர்ல் கேட்டல் நன்று
    அருமை ஐயா
    நன்றி
    தம 8

    ReplyDelete
  9. வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  10. வீட்டிற்கும் நாட்டிற்கும் பெரியாரின் சேவை ,தேவைதான் :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  11. பாடல் மூலம் அரும்பெரும் கருத்துகள்...

    தொடர்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  12. பெரியாரை மதிக்கும்போதே நாம் உயர்கிறோம் என்பதை பலர் மறந்துவிடுகின்றார்கள். இளைஞர்கள் மனதில்கொள்ளவேண்டிய வரிகளைக் கொண்ட பதிவு. நன்றி.

    ReplyDelete
  13. அருமை... பெரியவர்களின் துணை என்றுமே தேவை ஐயா...

    ReplyDelete
  14. "கெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்
    கெட்டவன் அந்தோ!" என்பது உண்மை தான் ஐயா!

    ReplyDelete
  15. நல்ல கருத்துக்கள் ஐயா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...