Friday, December 30, 2016

முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில் முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!




படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில்
பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே!
முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில்
முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!
வடிவில்லா பாத்திரங்கள் நடிக்கயிங்கே-விரைவில்
வந்திடுமாம் வடிவதற்கு காண்பீரிங்கே!
விடிவில்லா இரவுகளாம் இன்றேயிங்கே-விரைவில்
விளக்கமுற அறிவீர்கள தெளிவாயிங்கே!


புலவர் சா இராமாநுசம்

4 comments :

  1. அறங்கூறும் பாட்டெழுதிப் பாருங்களேன் விளைவுகள் ஏதாவது தெரிகிறதா என்று

    ReplyDelete
  2. எதற்கும் ஒரு முடிவு உண்டு ஐயா...

    ReplyDelete
  3. உங்களுடன் சேர்ந்து நாங்களும் எதிர்பார்க்கிறோம் ஐயா.

    ReplyDelete
  4. தொடரும் நாடகம்.... முடிவு எப்போது!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...