Tuesday, June 21, 2011

மீண்டு(ம்) வருகிறோம்

 

மாண்டார் இல்லை மாவீரர்-வீணில்
மகிழும் பகசே பாவீநீர்
மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம்
மீள ஆட்சி புரிவாரே
வேண்டாம் இனியும் கொடுங்கோலும்-எனில்
வீணில் படுவீர் அலங்கோலம்
பூண்டே அற்றுப் போவீரே-இந்த
புலவனின் சாபம் ஆவீரே

கெட்டவர் என்றும் கெடுவதில்லை-குணம்
கெட்டவ உன்னை விடுவதில்லை
பட்டவர் நாங்கள் உன்னாலே-அப்
பழியும பாவமும் பின்னாலே
விட்டதாய் நீயும எண்ணாதே-மேலும்
வேதனை எதையும் பண்ணாதே
நீ
தொட்டது எதுவும துலங்காதாம்-இனி
தோல்வியே உனகுலம விளங்காதாம்

அல்லல் பட்டு ஆற்றாது-அவர்
அழுத கண்ணீர் கூற்றாக
வள்ளுவர் குறளில் வடித்தாரே-இரவல்
வாங்கி யாவது படித்தீரா
கொல்லல் உமக்குக் தொழிலென்றே-உலகம்
கூறச் செய்தீர் மிகநன்றே
வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
வீழப் போவது நீங்கள்தான்

புலவர் சா இராமாநுசம்

2 comments :

  1. அருமை அருமை
    மீண்டு வருகிறோம்
    மீண்டும் வருகிறோம்
    ஆண்டது போதும் நீ-அலறி
    அடித்து ஓடு நீ
    என போர்ப்பரணி பாடிவரும் கவிதை
    அருமை அற்புதம் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உணர்ச்சி ததும்பும் கவிதை அருமை ஐயா,
    ஆனால் போரின் வலிகளை அனுபவித்த என் போன்றவர்கள் மீண்டும் வருவார்,
    இனியும் ஓர் போர் என்பதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.

    முற்றாக வெட்டிச் சரிக்கப்பட்டு நடமாடக் கூடத் திராணியற்ற நிலையில் தான் நாமெல்லாம் இருக்கிறோம். ஆகவே மீண்டும் போர் என்பதோ..
    மீண்டும் வருவோம் என்பதோ
    எம் காதுகளில் மீண்டும் மீண்டும் ஓர் சந்ததியினைப் பலிக்கடாவாக்கும் நிகழ்வாகத் தான் எதிரொலிக்கிறது.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...