Thursday, July 28, 2011

முத்தான மூன்று முடிச்சு



அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி  அவர்களின் அன்பு ஆணையை ஏற்று  இப் பதிவினை  இங்கே பதிவு செய்துள்ளேன். 
நன்றி

  இறை வணக்கம்-
           தாய்
           தந்தை
           வேங்கடவன்
  மிகவும் பிடித்தவை-
          எல்லா வற்றுக்கும் ஆதாரமாக
              வந்த தாரம்
          விழாது தாங்க விழுதென தாங்கும்
              நான் பெற்ற இருபெண்கள்
          என்னிலும் அறிவுடமை பெற்ற
              பேரர்கள் பேத்தி
  பிடித்தவை-
           முத்தமிழ்- இயல், இசை நாடகம்
           முக்கனி-மா, பலா, வாழை
           முந்நூல்-குறள், சிலம்பு, கம்பன் காவியம்
  இலக்கியம்-
           சங்க கால இலக்கியம்
           இடைக்கால இலக்கியம்
           தற்கால இலக்கியம்
  வாழவியல் நெறி-
           உண்மை, நேர்மை, நீதி
  கடை பிடித்தன-
           அ-வில் மூன்று-அன்பு,அறிவு, அடக்கம்
           இ-வில் மூன்று-இரக்கம், இன்சொல், ஈகை
           ப-வில் மூன்று-பண்பு, பக்தி, பணிவு
           ந-வில் மூன்று-நட்பு, நன்றி, நம்பிக்கை
           க-வில் மூன்று-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
  பொன்னுரை-
           நடந்ததை மறப்போம்
           நடப்பன நினைப்போம்
           வருவன வரட்டும்
  படித்த பிடித்த வரிகள்-
           யாதும் ஊரே யாவரும் கேளீர்
           உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்
           எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
  பாடல்-
           தேவாரம், திருவாசகம், சித்தர் பாடல்
  பழமொழிகள்-
           குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
           கிட்டாதாயின் பட்டென மற
           போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து
  குணநலன்- 
            கோபம்(கொஞ்சம்)
            பணிவும்
            துணிவும்(வேண்டியளவு)
  பிடிக்காதன-
            அதிகாரம் பிடிக்காது
              அதிகாரம் பண்ணவும் பிடிக்காது
            சண்டை பிடிக்காது 
              சரணா கதியும் பிடிக்காது
            ஆணவம்  பிடிக்காது
  மிகவும் பிடிக்காதன-
                1   போகவிட்டு புறம் பேசுதல்
        தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தல்
        நம்ப வைத்து கழுத் தறுத்தல்
               2    வஞ்சக மாகப் பழகுதல்
          வன்சொல் பேசுதல்
          வீண் அரட்டை அடித்தல்
              3     இரக்க மின்றி நடத்தல்
              ஈகையை தடுத்தல்
        ஏழ்மையை இகழ்தல்

 இன்னும் பல, எண்ணே இல, சொன்னது சில

 விருப்பு –  கணினி ,கவிதை, கருத்துரை

   வெறுப்பு - பச்சேந்தி குணம்,பணத்திமிர், பகல்வேஷம்

   வேண்டாத இயல்புகள்-
         பேராசை, பிடிவாதம், அழுக்காறு
 வருந்தியது-
         அறியாமல் பிறர் முகம் வாட பேசிவிடுவது
         அல்லல்படும்  யாருக்கும் உதவமுடியாத நிலையில்
         உவப்பக் கூடிய நண்பர்கள் உள்ளப் பிரியும் போது

   மறக்க முடியாதது- 
          தமிழகத் தமிழாசிரியர் கழகதின்  மாநிலத் தலைவராக பதினைந்து ஆண்டுகள் 
          பணியாற்றியது
          அதுபோது அமைச்சர்கள், அதிகாரிகள் இடத்தில்  அன்போடும், பண்போடும், 
          பணிவோடும் துணிவோடும் நடந்ததை அவர்கள் பாராட்டியது
          தற்போது நீங்கள் அனைவரும் என்னிடம் காட்டுகின்ற அன்பும் ஆதரவும்

   மறக்க நினைப்பவை-
                நண்பரகள் சிலரின் துரோகம்
                சுற்றத்தார் சிலர் செய்த வஞ்சகம்
                இன்னும் இன்னும்.....போதும்

   நெஞ்சம் எதிர் நோக்கும் ஆசை-
            1.       தனி ஈழம் மலரவேண்டும்
            2.       நான் அதை வாழ்த்திப் பாட வேண்டும்
            3.       அதுவரை நான் வாழ வேண்டும்...?

   முடிவு-
           அன்பு நெஞ்சங்களே முத்தான மூன்று முடிச்சுகளை எழுதி விண்ணில் தவழ
     விட்டு விட்டேன். தட்டினால் உங்களை நாடி வரும். ஆனால், நான் போட்ட மூன்று 
     முடிச்சுக்கு உரியவள், ஆம் என்னவள்  மூன்று முடிச்சுகளோடு போய்விட்டவள்
     வருவாளா...?
     
          நன்றி

35 comments :

  1. மிக சிறப்பு , மிக அருமையாக பதில்களாக..உள்ளது ஐயா.
    Vetha.Elangathilakam.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  2. தங்களை பற்றி எங்களால் சிறிது அறிய முடிந்துள்ளது..

    எனது கனா.................

    ReplyDelete
  3. உங்களது ஆசை ஒருநாள் நிறைவேறும்.....

    எனது கனா.................

    ReplyDelete
  4. மூன்று முடிச்சு
    முத்தாய் இருந்துன்ச்சு

    ReplyDelete
  5. அன்பின் ஐயா,

    நான் உங்களை அழைத்து மூன்று முடிச்சு பதிவிட உங்களை சிரமப்படுத்தினாலும் நீங்கள் தயங்காது இங்கே பதித்த வைர வரிகளுக்காக என் அன்பு நன்றிகள் ஐயா...

    சிறப்பானவைகளை மட்டும் தொகுக்காமல் உங்கள் பலம் உங்கள் பலகீனம், உங்களிடம் நீங்களே விரும்பாத சில குணங்கள் எல்லாமே இங்கே நாங்கள் பார்க்க தந்திருக்கிறீர்கள்... உங்களிடம் கற்க நிறைய நல்லவை இருக்கிறது... கற்று பயன்பெற்றால் எமக்கு சிறப்பு, ஆனால் இறுதி வரி :( சோகத்தின் விளிம்பில் நிறுத்திவிட்டதே ஐயா :( தாயாக உம்மை காத்த தாரமான உங்க மனைவியின் ஆயுளின் முடிவுற்றது என எண்ணாமல் அவரின் ஆத்மா எப்போதும் உங்களைச்சுற்றியே இருக்கிறது என்றே நான் நம்புகிறேன் ஐயா..

    கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு விட்டால் மனதும் உடலும் இன்னும் நலமடையும் ஐயா....

    இறைவணக்கத்தில் தாய் தந்தையரை முன்னிறுத்தி இறுதியில் தான் வெங்கடாசலபதியை சொல்லி இருக்கிறீர்கள்.. பெற்றோரின் கருணையும் ஆசியும் என்றும் உங்களுக்கு உண்டு ஐயா...

    மனைவிக்கு நீங்கள் தரும் முதல் இடம் என்றும் நிலைத்திருக்கும் ஐயா.. ஆமாம் ஆதாரமாக உங்களை தாங்க வந்த தாரமே.. சிறப்பான வரிகள் ஐயா இவை...

    பிடித்தவை முத்தமிழ், முக்கனி முன்னூல் சொன்னவை மிக சிறப்பு ஐயா...

    வாழ்வில் கடைப்பிடித்தவை அ, இ , ப, ந, க உங்களிடம் கற்று எல்லோருமே பயன் பெறக்கூடிய மிக அருமையான விஷயங்கள் ஐயா...

    நீங்கள் வருந்தியதாக கூறியது கூட உங்கள் கோபத்தினால் யாராவது மனம் புண்பட பேசி இருந்திருப்பதால் தான் அதைச்சொல்லி இருக்கிறீர்கள் என்று அறிய முடிகிறது ஐயா...

    பொன் வைக்கும் இடத்தில் பூ அல்ல ஐயா வைரங்கள் குவித்த பொக்கிஷங்களே அடுக்கி இருக்கிறீர்கள்..

    சிறப்பான மூன்று முடிச்சு பதிவிட்டமைக்கு என் அன்பு நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  6. அன்பின் ஐயா அவர்களுக்கு இனிய வணக்கம்,

    தாங்கள் வலைத்தளத்திற்கு இதுதான் என் முதல் வருகை... உங்களின் முத்தான பதிவை ரசிச்சு படித்தேன் அருமை... முத்து முத்தாய் இருந்தது இதில் உங்களைப்பற்றிய விசயங்களையும் கொஞ்சம் தெரிந்துகொண்டேன் சிறப்பாக பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்கய்யா...

    ReplyDelete
  7. முத்துச்சரம்...

    ReplyDelete
  8. /////நெஞ்சம் எதிர் நோக்கும் ஆசை-
    1. தனி ஈழம் மலரவேண்டும்
    2. நான் அதை வாழ்த்திப் பாட வேண்டும்
    3. அதுவரை நான் வாழ வேண்டும்...?/// நெஞ்சை தொட்டுட்டீங்க ஐயா ,உங்க காலத்தில் அது நடக்க வேண்டும் என்றே என் பிரார்த்தனையும்...

    ReplyDelete
  9. முத்தான மூன்றுரைத்த் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. ஐயா...ஒன்றொன்றாய்ச் சொல்லவில்லை.உங்களை நேரில் பார்த்துப் புன்னகை சிந்துவதாய் உங்கள் மனதைச் சொல்கிறது அத்தனை முத்துக்களும்.
    உங்கள் ஆசீர்வாதம் கேட்டுக்கொண்டு... !

    ReplyDelete
  11. நேரம் கிடைக்கிற நேரம் என் உப்புமடச் சந்திப்பக்கமும் வரக் கேட்டுக்கொள்கிறேன் ஐயா !

    http://santhyilnaam.blogspot.com/

    ReplyDelete
  12. முத்தான மூன்று என்றே - பல
    சத்தானவைகளை சொன்னீர்கள் ஐயா!

    முத்து முத்தாய், கொத்துக் கொத்தாய்
    அத்தனையும் அறிந்தாலும்
    முடிவிலே சொன்னீரே
    முள்ளோடு ரோசாவை வைத்து - அது
    லேசாக தைத்தே!

    சுமங்கலியாய் போன உங்கள் சுந்தரியை
    உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டு - இனி
    அவள் வருவாளா? என்றே இதயம் கசிவதேன்.

    சொல்லும் பொருளும் பொங்கிப் பெருகும்
    கவிதையைத் தருவது யார்? - கவிமிகு
    கவிதைக்கு கருவானது யார்?
    மறைக்காமல் மடை திறங்கள்
    மகுந்து கொட்டும் உங்கள்
    கவிதை வெள்ளங்கள்....

    நன்றி.. நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  13. மூன்று மூன்றாய் முத்துக்கள் கோர்த்துப் பின்
    கண்ணீர் முத்துக்களில் முடித்துவிட்டீர்களே நட்புக் கவிஞரே!

    ReplyDelete
  14. ஐயா உங்களை படமாக காட்டிவிட்டீங்கள்..
    அதிலும் ஒரு அழகான எழுத்து நடை...
    ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...
    உங்கள் குணமும் பிடிச்சிருக்கு ஐயா...

    ReplyDelete
  15. //மறக்க முடியாதது-
    தமிழகத் தமிழாசிரியர் கழகதின் மாநிலத் தலைவராக பதினைந்து ஆண்டுகள்
    பணியாற்றியது
    அதுபோது அமைச்சர்கள், அதிகாரிகள் இடத்தில் அன்போடும், பண்போடும்,
    பணிவோடும் துணிவோடும் நடந்ததை அவர்கள் பாராட்டியது
    தற்போது நீங்கள் அனைவரும் என்னிடம் காட்டுகின்ற அன்பும் ஆதரவும்//

    மிகவும் பாராட்டத்தக்க பதில்கள்.

    // முடிவு-
    அன்பு நெஞ்சங்களே முத்தான மூன்று முடிச்சுகளை எழுதி விண்ணில் தவழ
    விட்டு விட்டேன். தட்டினால் உங்களை நாடி வரும். ஆனால், நான் போட்ட மூன்று
    முடிச்சுக்கு உரியவள், ஆம் என்னவள் மூன்று முடிச்சுகளோடு போய்விட்டவள்
    வருவாளா...?//

    இப்படி முடிவு கொடுத்து என்னைக் கண் கலங்கச் செய்து விட்டீர்களே !

    பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்

    ReplyDelete
  16. அனைத்தும் முத்தான மூன்றுகள் ...

    ReplyDelete
  17. மூன்று முடிச்சு
    முத்தாய் இருந்துன்ச்சு

    ReplyDelete
  18. வாழ்க்கையின் முறையையும்
    வாழ்தலின் நெறியையும்
    வசந்தமாய்
    வசீகரமாய்
    கருத்தாய்
    கம்பீரமாய்
    சொன்ன விதம்
    அற்புதம் ஐயா

    ReplyDelete
  19. முத்தான மூன்று முடிச்சு முத்தாக ஜொலிக்கின்றன.. நன்றிகளுடன் வாழ்த்துக்கள் ஐயா....

    ReplyDelete
  20. தித்திக்கும் ஆனால் திகட்டவில்லை ... முத்தான மூன்று முடிச்சு... .. ரசிச்சு ரசிச்சு.. முழுவதையும் படிச்சு..முடிச்சுட்டேன்.... அத்தனையும் அருமை ஐயா

    ReplyDelete
  21. முத்தான மூன்று முடிச்சுகள் எப்பொழுதும் மனதில் முடிக்க வேண்டியவை.. அற்புதம்...அற்புதம்..அற்புதம்

    ReplyDelete
  22. தங்கள் கவிதைகளில் அத்தனை சராளமாக
    விழுவதற்கான காரணம் குறித்து நான்
    பலமுறை யோசித்திருக்கிறேன்
    இப்போது தங்கள் முத்தான மூன்று முத்துக்கள்
    படித்து முடிக்கையில் "உள்ளத்தில் உண்மை ஒளி
    உண்டாயின் அது வாக்கினில் உண்டாம்" என்ற
    கவிமணி அவர்களின் கவிதைக்கு பொருள்
    தெளிவாகப் புரிகிறது
    தங்களது ஆழ்ந்த புலமை அனுபவ அறிவு
    மனத் தூய்மை அனைத்தையும் இப்பதிவின் மூலம்
    தெளிவாக அறிந்து கொண்டோம்
    ஈடு செய்ய இழப்பினை தாங்கும் சக்தியை அருள வேணுமாய்
    அந்த வேங்கடவனை நானும் வேண்டுகிறேன்

    ReplyDelete
  23. தங்களிடமிருந்து கற்றுக் கொள்ள இந்தச் சிறியேனுக்கு நிறைய இருக்கிறது அய்யா.
    அத்தனையும் முத்துக்கள்.

    ReplyDelete
  24. ஐயா நீங்கள் கூறியவைகளில் ஏதாவது ஒன்றை எடுத்து எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது என கருத்து சொல்ல முடியாமல் செய்து விட்டீர்கள்.. அத்தனையும் முத்துக்கள் ஐயா.. முத்துக்கள்..

    காட்டான் குழ போட்டான்...

    ReplyDelete
  25. அனைத்தும் முத்தான மூன்றுகள் ...

    Reverie
    http://reverienreality.blogspot.com/

    ReplyDelete
  26. வணக்கம் ஐயா, முத்தான மூன்று விடயங்களாக உங்கள் ரசனைகளை வெவ்வேறு தலைப்புக்களின் கீழ் தித்திப்பாய்ப் பதிவு செய்திருக்கிறீங்க. உங்களைப் பற்றிய- உங்கள் ரசனைகள் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை இப் பதிவு எனக்குத் தந்திருக்கிறது.

    ReplyDelete
  27. முத்தான மூன்று உரைத்தவிதம் அருமையிலும்
    அருமை ஐயா.பகிர்வுக்கு மிக்க நன்றி விரைந்து
    தொடருங்கள் தங்களின் அடுத்த ஆக்கத்தைக்
    காணக் காத்திருக்கின்றது என் கண்கள்............

    ReplyDelete
  28. ///
    படித்த பிடித்த வரிகள்-
    யாதும் ஊரே யாவரும் கேளீர்
    உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்
    எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்//////


    உலகம் போற்றும் உன்னத வரிகளை பின்பற்றும் தாங்களையும் உலகம் போற்றும்...

    ReplyDelete
  29. ////
    மறக்க நினைப்பவை-
    நண்பரகள் சிலரின் துரோகம்
    சுற்றத்தார் சிலர் செய்த வஞ்சகம்
    இன்னும் இன்னும்.....போதும்/////

    அவர்களுக்கும் நன்மைபாராட்டுங்கள்...
    அதுதான் தண்டனை...

    ReplyDelete
  30. தங்களின் மனநிலையை மனோபாவத்தை.. தங்களுடைய குணாசியத்தை இதன் மூலம் அறிந்தேன்...

    வாழ்த்துக்கள்... வணக்கங்கள்...

    ReplyDelete
  31. தாரத்துக்குத் தகுந்த விளக்கம் தந்திருக்கின்றீர்கள். நானே வியக்கும் எதிர்காலச் சிற்பிகள். உங்களுக்கும் விருப்பைத் தந்திருக்கின்றார்கள். பிடிக்காதன கூறிப் பின் மிகவும் பிடிக்காதன கூறியிருக்கின்றீர்கள். இவையனைத்தும் உங்கள் அன்பே நிறைந்த அழகு உள்ளத்தைப் பிரதிபலித்துக் காட்டுகின்றது. உங்கள் மறக்கமுடியாத சம்பவங்களில் மனைவி இழப்பும் கலந்துவிட்டது. இது உங்கள் வாழ்வின் கசப்பான நிகழ்வானாலும், கணனி என்னும் புத்தகத்தில் நீங்கள் கலங்கும் நேரம் அத்தனையையும் செலவு செய்யுங்கள். கடந்தகால நிகழ்வுகளின் களிப்பான சம்பவங்களைக் காட்சிப்படுத்துங்கள். உள்ளம் என்னும் பூங்காவிற்குள் எம்போன்ற இரசிகர்களுக்கு அழைப்புவிடுங்கள். கவலை என்னும் கொடும் நோய்க்கு உங்களை நீங்கள் ஆட்படுத்திக் கொண்டால், உங்களைப் போன்ற அறிவாற்றல் பொக்கிஷங்களை எங்கிருந்து நாம் பெற்றுக்கொள்ள முடியும். அனைத்தும் நல்லதாக அமையும். உங்கள் முத்தான முடிச்சுக்கள் நன்று கனிந்த கனியாக விருந்தாகியது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. இன்று எனது வலைப்பதிவில்

    நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

    நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

    http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  33. புலவர் சா இராமாநுசம் said...
    அன்பு நெஞ்சங்களே!
    நன்றி மறப்பது நன்றல்ல-என்பதை வகுப்பறையில்,பாடமாக சொல்லிய புலவன்
    நான், இங்கே உங்கள் அனைவருக்கும், தனித்தனியாக நன்றி சொல்ல, தற்போதைய
    உடல்நிலை(முதுகுவலி)இடம் தரவில்லை
    மன்னிக்க!
    ஆனால் உங்கள் பதிவுகளைக்
    கண்டு கருத்துரைகளை உறுதியாக (சற்று முன பின்)
    பதிவு செய்வேன்

    உண்ணும் உணவைவிட, உட்கொள்ளும்
    மருந்தைவிட என்னை வாழ வைத்துக் கொண்
    டிருப்பது உங்கள்பதிவும், மறுமொழிகளுமே
    ஆகும் என்பதே உண்மை!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. நெஞ்சம் எதிர் நோக்கும் ஆசை-
    1. தனி ஈழம் மலரவேண்டும்
    2. நான் அதை வாழ்த்திப் பாட வேண்டும்
    3. அதுவரை நான் வாழ வேண்டும்...?

    /////// ////// /////


    தங்களின் முத்தான மூன்றுகளைப் படித்து மெய்மறந்தேன். குறிப்பாக மேற்காணும் மூன்று தங்களின் தமிழின, தமிழ் உணர்வை எங்களுக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். தமிழ் உணர்வாளர் ஒவ்வொருவரின் கனவும் அதுவே. அத்தகைய தங்களை என் அன்புக்குரியவராக நண்பராக வழிகாட்டியாக கற்பனையும்பொருளும் பொதிந்த பாவலராக நான் பெற்றதற்குப் பேருவகை எய்துகிறேன்.


    /////// ////// /////

    முடிவு-
    அன்பு நெஞ்சங்களே முத்தான மூன்று முடிச்சுகளை எழுதி விண்ணில் தவழ
    விட்டு விட்டேன். தட்டினால் உங்களை நாடி வரும். ஆனால், நான் போட்ட மூன்று
    முடிச்சுக்கு உரியவள், ஆம் என்னவள் மூன்று முடிச்சுகளோடு போய்விட்டவள்
    வருவாளா...?

    /////// ////// /////

    கண்டிப்பாக வருவார்.அவர்கள் தங்களோடு, தங்கள் நினைவுகளோடுதானே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரைத் தங்களின் கவிதைகள் வழி எங்களுக்கும் படம் பிடித்துக்காட்டுங்கள்.

    ReplyDelete
  35. அகரம் அமுதன் said...

    ஆறுதல் கூறிய அன்பு அமுத நன்றி
    உங்களைப் போன்ற உயர்ந்த
    நண்பர்கள் உள்ளதால தான் இன்று
    வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...