Wednesday, September 7, 2011

குறள் வழி நட்பு

உடுக்கை இழந்தவன் கைபோல-துயர்
உற்றால் நண்பனும் உடன்சால
தடுக்கத் தானே முன்சென்றே-உதவி
தந்திட வேண்டும் அஃதொன்றே
இடுக்கண் களைதல் நட்பென்றே-குறள்
இயம்பிய கருத்தும் மிகநன்றே
எடுப்பின் நட்பில் முடிவொன்றே-பெயரும்
எடுப்பார் பிரியா இணையென்றே

உணர்ச்சி ஒன்றே நட்பாகும்-இருவர்
உள்ளம் ஒன்றின் பொட்பாகும்
புணர்ச்சி பழகுதல் வேண்டாவே-இது
புரிந்தால் போதும் ஈண்டாவே
தளர்ச்சி இன்றி நடைபோடும்-நட்பு
தமிழ்போல் அழியா நிலைநாடும்
வளர்ச்சி காணும் எழுமதியாம்-தேய்வு
வாரா என்றும் முழுமதியாம்

நவில்தொறும் நூல்நயம் போலுமென-நல்
நட்பினைச் சொல்லல் சாலுமென
பயில்தொறும் பண்புளர் தொடர்புயென-அவர்
பழகினால் அவர்பால் ஆகும்மென
முகநக நட்பது நட்பல்ல-நண்பர்
முறையின்றி நடப்பின் தடைசொல்ல
அகமது மலரல் நட்பென்றே-ஐயன்
அறைந்ததை அறிவீர் நீரின்றே

43 comments :

  1. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    முதல் வருகை! முதல்வர் வாழ்தாம்
    நன்றி! நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. பாரி - கபிலர்
    ஔவை - அதியன்
    கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்
    துரியோதனன் - கர்ணன்

    இப்படி இன்று யாரைச் சொல்லமுடிகிறது..

    முக நகும் நட்புகளே..

    ஒரு சிலரே நட்பின் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இன்றும் வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. கோப்பெருஞ்சோழன்(அரசர்), பிசிராந்தையார்(புலவர்)இருவரும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்களாவர். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நட்புக் கொண்டிருந்தனர். கோப்பெருஞ்சோழன் தம் பிள்ளைகளோடு மாறுபட்டு தன் அரசுரிமையைத் துறந்து வடக்கிருந்து தம் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டார்.


    புலவரே நான் சொல்வது பொய்யல்ல உண்மை.

    ஒரு முனைவர்பட்ட வாய்மொழித்தேர்வில் வந்த ஆய்வாளர் புறநானூற்றில் தமிழ்ச்சமூகம் என்ற தலைப்பில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

    அப்போது..

    கோப்பெருஞ்சோழனும்
    பிசிராந்தையாரும் காதலர்கள் என்றார்.

    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

    யார் பெண் யார் ஆண் என்று கேட்டேன்.

    கோப்பெருஞ்சோழன் காதலனாம்
    பிசிராந்தயார் காதலியாம்

    இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கமலேயே காதலித்தார்களாம்.

    இந்தக்கொடுமையை எங்குபோய் சொல்ல.

    நட்பின் அடையாளமாக வாழாவிட்டாலும்
    நட்பின் அடையாளங்களைக் கூடத் தெரிந்துகொள்ள இன்றைய தலைமுறையினர் விரும்பவில்லை என்பதே உண்மை

    கற்க கசடற
    கற்பவை
    கற்ற பின்
    விற்க
    அதற்குத்தக

    என்ற குறள் தான் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  4. இவ்விடுகையோடு தொடர்புடைய இடுகை

    http://gunathamizh.blogspot.com/2009/06/blog-post.html

    நரை நீக்கும் நல்ல மருந்து.

    நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

    ReplyDelete
  5. நல்ல நட்பே கோடி புண்ணியங்களுக்கு சமம்.

    ReplyDelete
  6. நட்பைப்பற்றி இத்தனை சிறப்பாக வரைந்த கவிதை டைமிங் கவிதை போல எனக்காகவே இட்டது போல தோன்றுகிறது ஐயா....

    உண்மையே...

    உறவல்லாத இரு உள்ளங்கள் நட்பு கொண்டு சந்தோஷத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் தோளணைத்து எதிர்ப்பார்ப்பில்லாத அன்பை செலுத்தி நட்பைப்பேணி நட்புக்கே எடுத்துக்காட்டாக திகழும்படி வாழும் சிலரை உங்கள் கவிதை வரிகள் என் நினைவுக்கு வரவைத்தன ஐயா....

    இன்றைய காலை உங்கள் கவிதையால் அழகாய் மிளிர்ந்தது..... அன்பு வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  7. அன்பின் குணசீலன்,

    நட்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கி சரித்திரத்தில் தன் பெயரை பொறிக்க காரணமாக இருந்த அத்தனை பேரையும் மிக அருமையாக எடுத்துக்காட்டி இருக்கீங்க குணசீலன்..

    அன்பு வாழ்த்துகள்பா..

    ReplyDelete
  8. அருமையா இருக்குங்க அண்ணே!

    ReplyDelete
  9. ஐயா.... சூப்பரா கவிதை... எளிமையாய் குறள் மூலமாக...

    ReplyDelete
  10. நட்பை போற்றிய குறள்களை
    அழகுற கையாண்டிருக்கிறீர்கள் புலவரே.
    வடித்த கவிதை மனத்தைக் கவர்கிறது.
    நட்புக் குறள்களுக்கு கவிதை விளக்கம்.

    ReplyDelete
  11. முனைவர்.இரா.குணசீலன் said

    அன்புதம்பீ முனைவர் அவர்களே!
    இக் கவிதை பிறக்கக் காரணமே
    நீங்கள்தான்!
    முன்பு ஒருமுறை குறள் கருத்துக்களை
    எளிய வழிகளில் நாம் பரப்ப வேண்டும் என்று
    எழுதியிருந்தீர்கள்!
    அதன் வழி வந்ததே இக் கவிதையும்
    ஏன் நேற்றைய கவிதையும் ஆகும்
    இதுபோல ஏனைய தலைப்புகளிலும் எழுத
    முயற்சிப்பேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. முனைவர்.இரா.குணசீலன் said

    நட்பின் அடையாளமாக வாழாவிட்டாலும்
    நட்பின் அடையாளங்களைக் கூடத் தெரிந்துகொள்ள இன்றைய தலைமுறையினர் விரும்பவில்லை என்பதே உண்மை

    முற்றிலும் உண்மை முனைவரே!

    ஒருமுறை தமிழாசிரியர்க் கழகத்தின்
    தலைவராக இருந்த போது ஒருபள்ளியின்
    முதுகலை ஆசிரியர் ஒருவர் கேட்டார்
    சேனாவரையத்துக்கு உரைநூல்
    எங்கே கிடைக்கும் என்று.சேனாவரையமே
    உரைநூல் என்பதே அவருக்குத் தெரியவில்லை
    என்ன செய்வதுபுலவர்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. வேடந்தாங்கல் - கருன் *! said

    நல்ல நட்பே கோடி புண்ணியங்களுக்கு சமம்
    தங்களின் கருத்துக்கு மிகவும்
    நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. மஞ்சுபாஷிணி said...

    நாளும் வந்து ஊக்கம் தந்து
    எழுத ஆக்கம் தரும் உங்களுக்கு
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. விக்கியுலகம் said...

    நன்றி! நன்றி! நன்றி!
    நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. விக்கியுலகம் said...

    நன்றி! நன்றி! நன்றி!
    நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. தமிழ்வாசி - Prakash said...

    தம்பீ!
    தமிழ் கற்ற பேறும்
    தங்களைப் போன்றவர் தரும்
    சீரும் இதுவாகும்
    நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. மகேந்திரன் said...

    நட்பை போற்றிய குறள்களை
    அழகுற கையாண்டிருக்கிறீர்கள் புலவரே.
    வடித்த கவிதை மனத்தைக் கவர்கிறது.
    நட்புக் குறள்களுக்கு கவிதை விளக்கம்.

    நன்றி அன்பரே!
    எனக்குப் பெருமை சேர்தீர்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  20. நட்பு பற்றிய நல்ல கவிதை1

    ReplyDelete
  21. நன்றி ஐயா

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. சென்னை பித்தன் said...

    நன்றி ஐயா

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. நட்பு பற்றி எழுதிய மரபுப் பா. அருமை...அருமை...மகிழ்ந்தேன் பகிர்விற்கு. இறை அருள் கிட்டட்டும். அன்புடன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  24. இடுக்கண் களைதல் நட்பென்றே-குறள்
    இயம்பிய கருத்தும் மிகநன்றே/

    இயல்பாய் இயம்பிய கவி நன்றே!!

    ReplyDelete
  25. குறள் வழி ...புலவர் கவிதை வழி நட்பு... அருமை...

    ரெவெரி

    ReplyDelete
  26. குறளைச் சேர்த்துக் கவி படைத்து, உலகப் பொது மொழிக்குப் பெருமை சேர்த்த கவியே நீங்கள் வாழ்க!

    ReplyDelete
  27. நல்லது. இது தேவையும் கூட.

    ReplyDelete
  28. kovaikkavi said

    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. இராஜராஜேஸ்வரி said

    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. நிரூபன் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. id said

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. JOTHIG ஜோதிஜி said

    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. குறள் வழி நட்பு அருமையா சொல்லியிருக்கீங்க ஐயா. நன்றி

    ReplyDelete
  34. நட்பின் பெருமையை வியந்து படித்தேன்

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்

    ReplyDelete
  35. Lakshmi said...

    நன்றி! சகோதரி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. ♔ம.தி.சுதா♔ said...

    நன்றி! சகோ!
    வலை வழிவந்தேன்
    கண்டீரா..

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  37. அன்புடன் அருணா said...

    நன்றி! நன்றி! நன்றி!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  38. உணர்ச்சி ஒன்றே நட்பாகும்-இருவர்
    உள்ளம் ஒன்றின் பொட்பாகும்
    புணர்ச்சி பழகுதல் வேண்டாவே-இது
    புரிந்தால் போதும் ஈண்டாவே
    தளர்ச்சி இன்றி நடைபோடும்-நட்பு
    தமிழ்போல் அழியா நிலைநாடும்
    வளர்ச்சி காணும் எழுமதியாம்-தேய்வு
    வாரா என்றும் முழுமதியாம்

    மிகவும் அருமையான வரிகளையா .
    பாராட்டுக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ......

    ReplyDelete
  39. அம்பாளடியாள் said

    நன்றி மகளே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  40. நட்பின் மேன்மையை அழகாய் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துரைத்தக் கவிதைக்கு என் பாராட்டுகள் ஐயா. தங்களது இந்த முயற்சி தொடர்ந்து வந்து அனைவருக்கும் பயனளிக்கட்டும்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...