Friday, September 9, 2011

மண்ணுக்கு மரியாதை


மண்ணுக்கு மரியாதை தாமே-பிறந்த
மண்ணுக்குத் தருவது ஆமே
விண்ணுக்குச் சென்றாலும் மறையா-சிங்கள
வெறியர்கள் வென்றதும் முறையா
கண்ணுகுத் தெரிந்திட ஈழம்-விரைவில்
'கை'தட்டி வரவேற்க வாழும்
புண்ணுக்கு மருந்தாக நன்றாய்-உலகம்
போற்றிட சேருவோம் ஒன்றாய்

ஈழத்து மண்ணிலே இரத்தம்-அன்று
இழந்தனர் அந்தோ நித்தம்
வாழத்தான் வழியின்றி அவரே-இன்று
வாடிட விடுவதும் தவறே
சூழத்தான் வேண்டாமா இங்கே-பதில்
சொல்லுங்கள் தமிழுணர் வெங்கே
வீழத்தான் பார்பதும் கெடுதல்-தமிழ்
வேரிலே வென்னீரும் விடுதல்

இன்றில்லை என்றாலும் நாளை-இதை
எண்ணி வருந்திடும் வேளை
ஒன்றது வந்திடும் பாரும்-அது
உருவாக வேண்டுமா கூறும்
நன்றெது விரைவாக எண்ணி-தமிழ்
நாட்டோரே முடிவொன்று பண்ணி
குன்றென உறுதியாய் நின்றே-ஈழம்
கொடுத்திடத் துணையாவோம் இன்றே

புலவர் சா இராமாநுசம்

43 comments :

  1. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  2. -சிங்கள
    வெறியர்கள் வென்றதும் முறையா..... அரக்கர்கள் ஜெயித்தது ஒரு மாயை..... அவர்கள் அழிவது உறுதி என்று சபிக்கிறேன் இந்த மாயா... நன்றி ஐயா

    ReplyDelete
  3. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    முதல்வரே! வருக!
    நன்று என்றீர்! நன்றி நவின்றேன்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. Rathnavel said...

    தவறாமல் வரும் ஐயாவுக்கு
    தலைதாழ்ந்த வணக்கம்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. மாய உலகம் said...

    தங்கள் சாபம் அவனை அழிக்கட்டும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. மாய உலகம் said

    ஓட்டுக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. ///இன்றில்லை என்றாலும் நாளை-இதை
    எண்ணி வருந்திடும் வேளை
    ஒன்றது வந்திடும் பாரும்-அது
    உருவாக வேண்டுமா கூறும்///


    நாளை என்றொரு
    நாளிருக்கு
    அதில் யாம் என்பதன்
    பொருளிருக்கு!!

    அழகு அழகு
    அற்புதமான கவிதை புலவர் ஐயா

    ReplyDelete
  8. மாண்பிழந்தோர் மடியும் காலம் வரும் ....

    ReplyDelete
  9. இன தொடர்ந்து உணர்வு நெருப்பு அணையாது
    தொடர்ந்து காக்கும் உங்கள் கவிதைகள்
    அனைத்தும் அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. மகேந்திரன் said...

    நாளை என்றொரு
    நாளிருக்கு
    அதில் யாம் என்பதன்
    பொருளிருக்கு!!

    சரியான கருத்து சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. மகேந்திரன் said...

    மாண்பிழந்தோர் மடியும் காலம் வரும்
    முற்பகல் செயின் பிற்பகல் வருமே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. Ramani said...

    நன்றி சகோ நன்றி!!

    உங்கள் சைத்தானின் கவிதை மிக மிக
    அருமை! நாளொரு மேனியும் பொழுதொரு
    வண்ணமாக தங்கள் கவி வளம் வளர்வது கண்டு
    இந்த‍ அன்பு அண்ணன் அளவின்றி மகிழ்ச்சி
    அடைகிறேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. Ramani said...

    ஓட்டளிப்புக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. மீண்டும் நல்லதொரு கவிதை தந்தமைக்கு வாழ்த்துக்கள், ஐயா.

    ReplyDelete
  15. வை.கோபாலகிருஷ்ணன் said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. இனிய காலை வணக்கம் ஐயா,
    நாம் பிறந்த மண்ணுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், எம் தமிழ் உறவுகளின் நிலத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனும் சேதியினை உங்கள் கவிதை தாங்கி வந்து, விரைவில் விடுதலை கிடைக்கும் எனும் நம்பிக்கை மேலும் வலுச் சேர்த்து மனசைக் குளிர வைக்கிறது உங்கள் கவிதை.

    ReplyDelete
  17. மிக்க அருமையான கவிதை ...தங்களை வாழ்த்த வயதில்லை .......

    ReplyDelete
  18. அருமையான கவிதை.. மண்ணுக்கு மரியாதை செய்வோம்,..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  19. நிரூபன் said...

    விரைவில் விடுதலை கிடைக்கும் எனும் நம்பிக்கை மேலும் வலுச் சேர்த்து மனசைக் குளிர வைக்கிறது உங்கள் கவிதை.

    நன்றி நிரூபன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. koodal bala said...

    மிக்க அருமையான கவிதை ...தங்களை வாழ்த்த வயதில்லை .......

    மனமிருந்தால் அதுவே போதும் பாலா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. !* வேடந்தாங்கல் - கருன் *! said

    அருமையான கவிதை.. மண்ணுக்கு மரியாதை செய்வோம்,..
    வாழ்த்துக்கள்..
    நன்றி கருன் அவர்களே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. மண்ணுக்கு மரியாதை வேண்டும் தங்கள் பண்ணுக்கு என் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  23.  வணக்கமையா...
    இன்றில்லை என்றாலும் நாளை-இதை
    எண்ணி வருந்திடும் வேளை
    ஒன்றது வந்திடும் பாரும்-அது
    உருவாக வேண்டுமா கூறும்
    நன்றெது விரைவாக எண்ணி-தமிழ்
    நாட்டோரே முடிவொன்று பண்ணி
    குன்றென உறுதியாய் நின்றே-ஈழம்
    கொடுத்திடத் துணையாவோம் இன்றே

    ஆமையா நாங்களும் துணையாவோமையா.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  24. கீதா said... மண்ணுக்கு மரியாதை வேண்டும் தங்கள் பண்ணுக்கு என் பாராட்டுகள் ஐயா.

    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    9 September 2011 12:00 AM

    ReplyDelete
  25. காட்டான் said...

    ஆமையா நாங்களும் துணையாவோமையா.. வாழ்த்துகள்..

    நன்றி! காட்டான் அவர்களே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. தமிழ்
    வேரிலே வென்னீரும் விடுதல்.......

    தகுமோ..??


    நல்லதொரு சிந்தனை புலவரே.

    ReplyDelete
  27. உணர்வுகள் பொங்கும் வரிகள் .... தமிழன் என்று மறந்து மதிக்கெட்டு அரசியல் வியாதிகளின் பின்னே செல்லும் மூடர்கள் நம்மில் மடிய வேண்டும் முதலில் ...

    ReplyDelete
  28. முனைவர்.இரா.குணசீலன் said...

    நல்லதொரு சிந்தனை புலவரே

    நன்றி முனைவரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. தினேஷ்குமார் said

    உணர்வுகள் பொங்கும் வரிகள் .... தமிழன் என்று மறந்து மதிக்கெட்டு அரசியல் வியாதிகளின் பின்னே செல்லும் மூடர்கள் நம்மில் மடிய வேண்டும் முதலில் ...

    மிகத் தெளிவாக சொன்னீர் அன்பரே!நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. மண்ணுக்கு மரியாதையை செய்யும் கவிதை.

    ReplyDelete
  31. துஷ்யந்தன் said...

    மண்ணுக்கு மரியாதையை செய்யும் கவிதை

    நன்றி துஷ்யந்தன் அவர்களே

    ReplyDelete
  32. இன்றில்லை என்றாலும் நாளை-இதை
    எண்ணி வருந்திடும் வேளை
    ஒன்றது வந்திடும் பாரும்-

    விரைவில் வரட்டும் அந்நாள்

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  33. மண்ணுக்கு மரியாதை அருமை!

    ReplyDelete
  34. M.R said

    விரைவில் வரட்டும் அந்நாள்
    நிச்சியம் வரும் அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. M.R said...

    ஓட்டளிப்புக்கு நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. சென்னை பித்தன் said

    நன்றி பித்தரே!

    ReplyDelete
  37. ஈழத்து மண்ணிலே இரத்தம்-அன்று
    இழந்தனர் அந்தோ நித்தம்
    வாழத்தான் வழியின்றி அவரே-இன்று
    வாடிட விடுவதும் தவறே
    சூழத்தான் வேண்டாமா இங்கே-பதில்
    சொல்லுங்கள் தமிழுணர் வெங்கே
    வீழத்தான் பார்பதும் கெடுதல்-தமிழ்
    வேரிலே வென்னீரும் விடுதல்

    மனதை நெகிழவைக்கும் வலிதரும்
    கவிதை வரிகளையா .உங்கள் பேத்தியை
    பார்க்க வேண்டுமா?...இந்த மகளோட தளத்தில்
    வந்து பாருங்க .நன்றி ஐயா பகிர்வுக்கு .......

    ReplyDelete
  38. அம்பாளடியாள் said...

    மனதை நெகிழவைக்கும் வலிதரும்
    கவிதை வரிகளையா .உங்கள் பேத்தியை
    பார்க்க வேண்டுமா?...இந்த மகளோட தளத்தில்
    வந்து பாருங்க .நன்றி ஐயா பகிர்வுக்கு

    நன்றி மகளே! ஓட்டுக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  39. நம்பிக்கை வரிகளில் மனம் நிறைந்தது....

    ஈழம் மலரும் என்று மனமும் வேண்டி நின்றது....

    உங்கள் உணர்வுகளை இங்கே கவிதையாக்கி சிறப்பிக்கிறது....

    அன்பு வாழ்த்துகள் ஐயா....

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...