Wednesday, November 23, 2011

ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்


 ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது
    உடைந்தால் வருவது வீழ்வாகும்
உற்றவர் உறவினர் தம்மோடும்-நல்
    உறவே கொண்டால் உம்மோடும்
மற்றவர் தருவது அன்பாகும்-இதை
    மறப்பின்  வருவது துன்பாகும்
கற்றவர் கல்லார் பேதமிலை-நாளும்
   கருதி நடப்பின் சேதமிலை

சாதிப் பூசல் வேண்டாமே-வீண்
   சமயப் பூசல் வேண்டாமே
பீதியைக் கிளப்பி நாடெங்கும்-நம்
   பிள்ளைகள் பெண்கள் வீடெங்கும்
வீதியில் நடக்கவே அஞ்சிடவே-வரும்
    வேதனை ஒன்றே மிஞ்சிடவே
ஆதியில் உண்டா சாதியென-நீர்
    ஆய்ந்தால் அறிவீர் பாதிலென

மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி
     மதமிகு வேழமாய்த் திரியாதீர்
இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
    எதுவும் சம்மதம் சாற்றுங்கள்
அதன்வழி அழியும் கேடுகளே-செய்தி
     அறியத் தருநல் ஏடுகளே
பதமுற எதையும் போடுங்கள்-கலவரம்
    பரவா வழிதனை நாடுங்கள்

உலக மெங்கும் போராட்டம்-பெரும்
    ஊழல் வாதிகள் வெறியாட்டம்
கலகம் இல்லா நாடில்லை-தினம்
   காணும் செய்திக்கோர் அளவில்லை
திலகம் காந்தி புத்தரென-வாழ்ந்த
   தேசமும் மதவெறி பித்தரென
அளவில் நாளும் நடக்கிறதே-மக்கள்
    அஞ்சிட காலம் கடக்கிறதே

            புலவர் சா இராமாநுசம்

32 comments :

  1. நல்ல கவிதை ஐயா..... நிதர்சனம்.....

    ReplyDelete
  2. உலக மெங்கும் போராட்டம்-பெரும்
    ஊழல் வாதிகள் வெறியாட்டம்
    கலகம் இல்லா நாடில்லை-தினம்
    காணும் செய்திக்கோர் அளவில்லை//

    நிதர்சன உண்மை அய்யா..
    அசத்தலாக கவிதை வடிவில்..

    ReplyDelete
  3. நிதர்சனமான வரிகள் அருமையன கவிதை

    ReplyDelete
  4. மனிதனையும் யானையையும் ரசிக்கலாம்,மதம் பிடிக்கும் வரை.

    நன்கு உரைக்கும் படி சமூகதில் நிலவும் அவலங்களை தங்கள் வரிகளிநூடே சாடி உள்ளீர்கள்.
    நிச்சயம் நமக்குள் ஒற்றுமை தேவை!

    ReplyDelete
  5. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென
    அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் புலவரே...
    சாதியின் பெயரால் நம்மை பிரித்தாள நினைப்பவர்களின் மேல்
    கரியை பூசி
    ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்துகாட்ட வேண்டும்....

    ReplyDelete
  6. /////சாதிப் பூசல் வேண்டாமே-வீண்
    சமயப் பூசல் வேண்டாமே////

    என்றும் இம்மொழியே எம் செம்மொழியாய் வாழ்வை படித்திடுவோம் இவ் வையம் தளைத்திடுமே...

    நன்றி ஐயா..


    ம.தி.சுதா
    மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

    ReplyDelete
  7. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை அழுத்தமாக, அழகாகக் கவிதையாக்கித் தந்துவிட்டீர்கள்!

    ReplyDelete
  8. சாதிப் பூசல் வேண்டாமே-வீண்
    சமயப் பூசல் வேண்டாமே
    பீதியைக் கிளப்பி நாடெங்கும்-நம்
    பிள்ளைகள் பெண்கள் வீடெங்கும்
    வீதியில் நடக்கவே அஞ்சிடவே-வரும்
    வேதனை ஒன்றே மிஞ்சிடவே
    ஆதியில் உண்டா சாதியென-நீர்
    ஆய்ந்தால் அறிவீர் பாதிலென//

    இது மட்டும் இல்லைன்னா மனித வாழ்வு எப்போதோ உய்ந்து இருக்கும் இல்லையா புலவரே, சூப்பரா இருக்கு கவிதை...!!!

    ReplyDelete
  9. ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் சிறப்பான கவிதை ஐயா.

    ReplyDelete
  10. வெங்கட் நாகராஜ் said


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. வேடந்தாங்கல் - கருன் *! said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. K.s.s.Rajh said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. கோகுல் said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. மகேந்திரன் said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. ♔ம.தி.சுதா♔ said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. கவிதை வீதி... // சௌந்தர்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. சென்னை பித்தன் said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. MANO நாஞ்சில் மனோ

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. சத்ரியன் said


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென
    அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் புலவரே...

    இரவு வணக்கங்கள்...

    ReplyDelete
  21. வணக்கம் ஐயா!
    அருமையான கவிதை சாதி பூசல் தொடக்கம் சமயப்பூசல் வரை அழகாக சாடி இருக்கிறீர்கள்..
    வாழ்த்துக்கள் ஐயா!!!

    ReplyDelete
  22. //உற்றவர் உறவினர் தம்மோடும்-நல்
    உறவே கொண்டால் உம்மோடும்
    மற்றவர் தருவது அன்பாகும்-இதை
    மறப்பின் வருவது துன்பாகும்//

    ஆமாம் அய்யா! அனைத்தும் அருமையான வரிகள்.சமூக நோக்கு கொண்டவை,நன்று

    ReplyDelete
  23. //ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது
    உடைந்தால் வருவது வீழ்வாகும்//

    அருமையான ஆரம்ப வரிகள். நல்ல கவிதை. vgk

    ReplyDelete
  24. மனிதன் ஒன்றென இறைவன் படைக்க இறைவனையே பிரித்துப் பாக்கிறான் மனிதன்.உங்கள் ஆதங்கம் யார் காதில் விழப்போகிறது !

    ReplyDelete
  25. ஒற்றுமை இல்லை எனில் அது அழிவுக்கான பாதை... ஒற்றுமையே வெற்றிக்கான பாதை... உங்களது ஆதங்க கவிதை அருமை ஐயா!

    ReplyDelete
  26. இன்றைய சூழலில் மிகவும் தேவையான வணங்க தக்க சிறந்த பா ஏனெனின் நீவீர் குறிப்பிடும் இந்த சிக்கல்கள் தான் நமது குமுகத்தை சீரழித்துக் கொண்டு இருக்கிறது வணங்குகிறேன் பாராட்டுகளுடன் ....

    ReplyDelete
  27. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென
    அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் புலவரே...

    ReplyDelete
  28. Pl check your Spam Folder..

    ReplyDelete
  29. ஒற்றுமை இல்லாமல் பார்த்துக் கொள்வதற்கு எத்தனையோ நபர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் ஒன்று பட சொல்ல தான் ஆட்கள் அரிதாகி விட்டார்கள்...

    ReplyDelete
  30. இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
    எதுவும் சம்மதம் சாற்றுங்கள்

    சம்மதமான வரிகள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...