Thursday, December 15, 2011

முந்தைய பதிவிற்கு முக்கிய விளக்கம்!அன்பர்களே!
          முந்தைய பதிவில் முதற்கட்டப் பணிகளைப் பற்றிய
விபரங்களைக் குறிப்பிட்டிருந்தேன்
           இன்று இரண்டாவதுக் கட்டப்பணிகள் பற்றி எழுது
வதாக இருந்தேன்.அதைப் பற்றி சற்று விரிவாக எழுதவேண்டி
இருப்பதால் திங்களன்று எழுதுகிறேன்
    அதற்கு முன்னதாக சிறு விளக்கம் தர விரும்புகிறேன்
         முந்தைய பதிவில் மூன்று மாவட்டங்கள் என்று நான்
குறிப்பிட்டதை மற்ற மாவட்டங்கள் ஏதோ தங்களை ஒதுக்கி விட்ட
தாகக் கருதுவதுபோல் ஐயப்படுகிறேன்! எந்த மாவட்டமானாலும்
யார் விரும்பினாலும் தாராளமாக வரலாம்
         மேலும் தற்போது ஏற்படுத்தும் பொறுப்பாளர்கள் தற்
காலிகமே! அவர்கள் பதவிக்காலம் இரண்டொரு மாதங்களே
ஆகும் பொங்கல் திருநாள் சென்றபின் சனவரி கடைசி வாரத்தில்
அல்லது பிப்ரவரி முதல் வரத்தில் எல்லா மாவட்டங்களைச்
சேர்ந்த  பொதுக்குழு உறுப்பினர்களைக் கூட்டி முறையாக
பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் அவர்களே
அதிகாரப் பூர்வமாகச் செயல் படுவபராவார்
          உடனடி பதிவு செய்வதற்கும் இந்த இடைக்
காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்வதற்கும்
இந்த தற்காலிக அமைப்புத்  தேவையாகும்!
         எந்த மாவட்டங்களில் எத்தனைப் பேர் உள்ளனர்
என்ற கணக்கு எனக்குத் தெரியாது. எனவேதான் தற்போது
பதிவு செய்ய நமக்குத் தேவை குறைந்த எண்ணிக்கை
தானே,பக்கத்துப்பக்க  மாவட்டங்களே போதுமே சற்று
தூரமிருந்து  வருவது வீண் சிரமம்தானே என்று கருதினேன்
     
         ஆர்வத்தோடு யார் வருவதானாலும் நன்மையே!
மனங்கலந்து பேசுவதற்கும் வாய்ப்பாக இருக்கும்!
எத்தனை பேர் வருவார்கள் என்ற கணக்கு முன்னதாக
எனக்குத் தெரிந்தால் தான் கூட்டம் நடத்த ஏற்ற இடம்
ஏற்பாடு செய்ய இயலும்
         ஆகவே யார் யார் வருகிறீர்கள் என்பதை இப்
பதிவின் கீழ், பெயர் ஊர் ஆகியவற்றைக் குறிப்பிட்டு
உறுதிப்படுத்தி மறுமொழி தருமாறு வேண்டுகிறேன்
      நான்கு நாட்களுக்குள் அதாவது திங்கள்வரை
எதிர் பார்க்கிறேன்!
                நன்றி!            அன்பன்
                            புலவர் சா இராமாநுசம்
                                          வணக்கம்  

       தொலைபேசி -24801690  செல் -9094766822
                              

21 comments :

 1. உங்கள் எண்ணம் புரிகிறது புலவரே, நல்லதே நடக்கும் நான் முற்றிலும் ஆதரவு தருகிறேன் வரமுடியாவிட்டாலும்...

  ReplyDelete
 2. தாங்கள் சொல்வது சரிதான் ஐயா..அதன்படியே செயல்படுவோம்..நான் தயார்..

  மதுமதி
  கோடம்பாக்கம்
  சென்னை.24

  ReplyDelete
 3. நீங்கள் விதைக்கும் இவ்வித்து மரமாய் வளர்ந்து,பூத்துக் காய்த்துக் கனி தரும் என்பதில் ஐயமில்லை.
  கூட்டத்திற்கு நானும் வருவேன்,இறையருள் இருப்பின்!
  சென்னை பித்தன்,சென்னை.

  ReplyDelete
 4. you lines are simply super super super. i written some tamil kavithai in my blog.
  please check and give ur comments
  http://alanselvam.blogspot.com/

  ReplyDelete
 5. பதிவர் சங்கங்கள் அவசியமற்றது என படித்தேன். அவசியம், அவசியமற்றது என்பது அவரவர் மனதை பொறுத்தது. ஆரம்பியுங்க சங்கம் வளர்த்த தமிழ் அல்லவா.

  ReplyDelete
 6. மேலும் இதுதொடர்பான விவரங்களை தொடரும் பதிவுகளின் வாயிலாக அறிய ஆவலாயுள்ளேன்.

  ReplyDelete
 7. அன்பர்களே!
  தற்போதைய தேவை வருபவர்களின் எண்ணிக்கை
  மட்டுமே!
  எனவே இனி மறுமொழி இடுவோர் கலந்து கொள்கிறேன் என்று உறுதிப்படித்தி பெயரும் ஊரும்
  மட்டுமே எழுதினால் போதும் என்பதை அன்போடு
  தெரிவித்துக் கொள்கிறேன்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 8. உங்கள் முயற்சி தொடரட்டும்.நாங்கள் வேறு நாட்டில் இருக்கின்றோம் ஜயா எனவே உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகின்றோம்

  ReplyDelete
 9. சரிதான் அய்யா! படிப்படியாக செய்யலாம்.தங்கள் முயற்சிக்கு என்னுடைய ஆதரவு.

  ReplyDelete
 10. தற்காலிகமாக ஆரம்பியுங்கள்.... நாங்களும் இணைகிறோம்....

  ReplyDelete
 11. அய்யாவின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்..

  ReplyDelete
 12. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றால் நிச்சயம் கலந்து கொள்கிறேன்.
  ம.கோகுல்.
  புதுச்சேரி.

  ReplyDelete
 13. Ippothu temporary Nabargalai thernthedungal. Piragu Naan Permanent Member aga Nichayam inainthu kolkiren Ayya.

  Vaalga Pathivalar Sangam!

  ReplyDelete
 14. உங்களின் முயற்சிக்கு எனது மனதார வாழ்த்துக்கள்.

  என் வலையில் :
  "நீங்க மரமாக போறீங்க..."

  ReplyDelete
 15. naan. ippathan blog paarthen. ok. monday i wil cal you

  ReplyDelete
 16. கண்டிப்பாக கலந்துக்கொள்கிறேக்..

  திருவள்ளூர்.

  ReplyDelete
 17. நான் நிச்சயம் கலந்து கொள்கிறேன் புலவரே.

  -பா.கணேஷ்
  மே.மாம்பலம், சென்னை.

  ReplyDelete
 18. எல்லாம் நல்ல படி தானே நடக்கிறது..ஏனய்யா சங்கம்? ஊர் இரண்டு படும் முயற்சி தானே சங்கம் என்றால்..?. எழுத்து ஒரு பொழுது போக்குடன் கூடியது. இது மகிழ்வாக செல்ல வேண்டியது.. ஏன் இப்படி ஒரு சீரியஸ் சிந்தனை வந்தது?
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...