Friday, February 10, 2012

கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்


ஏடெடுத்தேன் கவிஎழுத நெஞ்சில் வந்தே-அந்த
ஈழத்து கொடுமையது துயரம் தந்தே
பாடெடுத்த பாடுயென இங்கே அதனை-நான்
படைத்திட்டேன படியுங்கள நீரும் இதனை
ஓடெடுத்து தெருத்தெருவாய் பிச்சை கேட்டே-பக்சே
ஓடிவர கண்டுமனம் மகிழ்ந்து பாட்டே
தேடிவரும் தீந்தமிழில் எடுத்துச் சொல்ல-வெற்றி
தேடிவரும் தனிஈழம் காண்போம் வெல்ல

பால்மணமே மாறாத குழந்தை கூட-பக்சே
பாவியவன் படையாலே சாவை நாட
காலிழந்தார் கரமிழந்தார் கண்ணும் இழந்தார்-மேலும்
கணக்கற்றோர் மடிந்தீழ மண்ணில வீழ்ந்தார்
தாலிதனை இழந்திட்ட தாய்மார் சாபம்-துயர்
தணியாத ஈழத்து மறவர் கோபம்
கூலியென கொடுத்திடுமே அழிவாய் நீயும்-பெரும்
கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்

இளம்பெண்கள் கற்பிழந்தார் உனதுப் படையால்-ஈவு
இரக்கமெனும் குணமில்லா அரக்க நடையால்
வளமிக்க வன்னிகா டழிந்தே போக-நீ
வான்வழியே குண்டுமழை பெய்து ஏக
களமறவர் எம்தமிழர் விடுதலைப் புலிகள்-அந்தோ
கண்மூடி பலியாக சிங்கள எலிகள்
உளமகிழ கூத்தாடும் நிலையும் கண்டோம்-கண்ணீர்
உதிரமென உதிர்கின்ற நிலையே கொண்டோம்

இனிஒன்றாய் வாழ்வதற்கே இயலா தென்றே-அவர்
எண்ணித்தான் முடிவாக எதிர்த்து அன்றே
தனிநாடாய் ஈழத்தை பிரியு மென்றார்-ஆனால்
தரமறுக்க ஆயுதத்தை ஏந்தச் சென்றார்
நனிநாடும் உலகத்தில் உரிமைப் போரே-எங்கும்
நடத்தாமல் பெற்றாரா சொல்லும் யாரே
கனியிருக்க காயுண்ணும் மடையர் இல்லை-ஈழம்
காணாமல் இனியுறக்கம் இல்லை இல்லை


(நன்றி முத்துக்கமலம்)

                    புலவர் சா இராமாநுசம்

9 comments :

  1. வேதனையான கவிதை.

    ReplyDelete
  2. கண்ணீர்க் கவிதை.

    ReplyDelete
  3. சோகமான நிகழ்வுகளைச் சொல்லும் கவிதை

    ReplyDelete
  4. முன்பே ஒருமுறை படித்த ஞாபகம். இருப்பினும் இப்போதும் மனதில் வேதனை அலைகளை ஏற்படுத்திய கவிதை. நன்று!

    ReplyDelete
  5. ஈழத்துச் சோகம் சொல்லும் அருமையான கவிதை புலவர் அய்யா. நன்று.

    ReplyDelete
  6. உணர்வுபூர்வமான உள்ளம் தொடும் கவிதை!

    ReplyDelete
  7. கொலைகார பக்சேயின் உடலை பேய்கள் மட்டுமல்ல...ஈக்களும் மொய்க்காது...புழுக்களும் தின்னாது...மண்ணும் அரிக்காது..அழுகி....அழுகி....நாற்றமெடுத்து...அவலமாக இறந்து ஆன்மா அடங்காத பேயாய் பல ஜென்மங்கள் நாயாய் திரிவான்
    போர் குற்றவாளிகளுக்கு இதுதான் நிலை என நம் தமிழ் நூல்கள்
    கூறுகின்றன இது பொய்க்காது.....

    ReplyDelete
  8. காலம் மாறும் ஒரு நாள் ...

    ReplyDelete
  9. மனமாறப் புலம்புவோம்.எங்கோ ஒரு சூரிய வெளிச்சம் விடிய வைக்க நிச்சயம் வரும் !

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...