Friday, March 2, 2012

மாற்றம் ஒன்றே நிலையாகும்!


மாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில்
   மாறா எதுவும் இலையாகும்
கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால்
    கூறும் காரணம் பலவாகும்

தோற்றம் என்று தோன்றியதோ-அன்றே
   தொடர்ந்து மாற்றமும் தோன்றியதே
ஆற்றல் என்பதும் காலத்தால்-நாளும்
    அடிக்கடி மாறும் கோலத்தால்

அடைமழை வறட்சி பனியென்றே-இந்த
    அவனியில் காணும் நிலையின்றே
விடைதனை அறியா கேள்விபல-நெஞ்சில்
     வேதனை மூட்டும் கேள்விசில

தடையது வந்தால் மாறுவதும்-பல
    தத்துவ விளக்கம் கூறுவதும்
நடைஉடை கால மாற்றத்தில்-இங்கே
    நாளும் நடப்பது தோற்றத்தில்

ஆதியும் அந்தமும் இல்லாத-அந்த
    ஆண்டவன் படைப்பில் சொல்லாத
சாதியும் வந்தது எப்போது-நமக்குள்
    சண்டை மூண்டிட இப்போது

பாதியில் புகுந்தது அதுவொன்றே-கலகம்
    பரவக் காரணம் அதுயின்றே
நீதியும் மாறும் நிலைகண்டோம்-எனில்
    நிலையாய் எதனை நாம்கொண்டோம்

எப்படி எதையும் ஆய்ந்தாலும்-பல
   எண்ணங்கள் மனதில் சூழ்ந்தாலும்
ஒப்பிட மாறா ஒன்றில்லை-என
   உணர்ந்தால் வாரா ஒருதொல்லை

தப்படி வைத்தே நடக்கின்றோம்-பிறர்
   தடுப்பின் போரே தொடுக்கின்றோம்
இப்படி இருக்கும் இவ்வுலகில்-இனி
    எல்லாம் மாற்றம் மாற்றம்தான்!

                               புலவர் சா இராமாநுசம்






19 comments :

  1. எப்படி எதையும் ஆய்ந்தாலும்-பல
    எண்ணங்கள் மனதில் சூழ்ந்தாலும்
    ஒப்பிட மாறா ஒன்றில்லை-என
    உணர்ந்தால் வாரா ஒருதொல்லை

    அருமையான வரிகள் ஐயா

    ReplyDelete
  2. மாற்றமே மாறாதது என அழ்காக விளக்கிய பாடல்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  3. koodal bala said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. சசிகலா said..

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. Sankar Gurusamy said.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. மாற்றமே இல்லாதது மாற்றம் மட்டுமே... இதை அழகிய கவிதையாக்கித் தந்த உங்களுக்கு எனது நன்றி...

    ReplyDelete
  7. மாற்றமே நிலையாகும் அழகிய கவிதை/பாடல்.. பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா...

    நீண்ட நாட்களுக்கப்புறம் உங்கள் வலை பிரச்னை இல்லாமல் திறக்கிறது...

    ReplyDelete
  8. அத்தனை வரிகளும் அருமை!

    \\\\\தோற்றம் என்று தோன்றியதோ-அன்றே
    தொடர்ந்து மாற்றமும் தோன்றியதே///

    மிக அருமை!

    ReplyDelete
  9. //ஆதியும் அந்தமும் இல்லாத-அந்த
    ஆண்டவன் படைப்பில் சொல்லாத
    சாதியும் வந்தது எப்போது-நமக்குள்
    சண்டை மூண்டிட இப்போது//

    - அருமை புலவரய்யா. அசத்தல் வரிகள். அத்தனையும்தான். ரசித்தேன். தமிழ் மழையில் நனைந்தேன்.

    ReplyDelete
  10. //எப்படி எதையும் ஆய்ந்தாலும்-பல
    எண்ணங்கள் மனதில் சூழ்ந்தாலும்
    ஒப்பிட மாறா ஒன்றில்லை-என
    உணர்ந்தால் வாரா ஒருதொல்லை//

    நித்தமொரு மாற்றத்தால் நிலைமாறும் இவ்வுலகில் இடரின்றி வாழ வழிமுறைகள் சொல்லும் இனிய கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  11. வெங்கட் நாகராஜ் said..

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. திண்டுக்கல் தனபாலன் said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. ரெவெரி said..

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. துரைடேனியல் said..

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. கீதமஞ்சரி said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. //ஆதியும் அந்தமும் இல்லாத-அந்த
    ஆண்டவன் படைப்பில் சொல்லாத
    சாதியும் வந்தது எப்போது-நமக்குள்
    சண்டை மூண்டிட இப்போது// கவிஞன் என்பவன் சமூகத்தின் அவலங்களை சுட்டும் பொது முழுமை பெறுகிறான் .உங்களின் எழுச்சிமிகு வரிகள் படிப்போரை யோசிக்க வைக்கும் அருமை .............

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...