Monday, March 12, 2012

இன்றென் பதிவு இருநூறே!


இன்றென் பதிவு இருநூறே-நான்
   எழுதிடப் பெற்றேன்! பெரும்பேறே!
சென்றன நாட்கள் இப்படியே-இனி
   செல்லுமா காலம் அப்படியே!
ஒன்றென இரண்டென நாளும்தர-என்
    உள்ளத்தில் கவிதை பிறந்துவர
நன்றென நீங்கள் நவின்றதுவே-மேலும்
   நல்கிடக் காரணம் ஆனதுவே

வளர்த்த பெருமை உமக்காகும்-உமை
   வாழ்த்திட வாய்ப்பு எனக்காகும்
தளர்ந்த வயதில் கோல்போல-எனக்கு
    தந்தீர் ஊக்கம் நாள்போல
விளைந்த கவிதை நிலைபோல-நல்
   விதையில் பெய்த மழைபோல
வளைந்த நெல்லின் கதிர்போல-நான்
    வணங்கிட வாழ்த்துவீர் முன்போல
 
தானே புயல்போல் என்னவளே-துயர்
   தாக்க மறைந்துப் போனதிலே
வீணே! வாழ்வு இனியென்றே-மனம்
   வெதும்ப ஏங்கும் நிலையன்றே
ஏனோ இனியும்  வாழ்வதென-என்ற
   எண்ணம் நெஞ்சில் சூழ்ந்ததென
நானோ! வருந்திட வலைப்பூவே-உயிர்
   நல்கிய திந்த அலைப்பூவே!


நேரம் போவது தெரியாமல்-வேறு
   நினைப்பே ஏதும் அறியாமல்
பாரம் மிக்க எண்ணமே-கவிதைப்
   படைக்க சூழும் வண்ணமே
யாரும் வருவார் போவாரே-அவர்
   எவரோ அறியார் ஆவாரோ
கூறும் எதுவும் செவியேறா –அது
   குறையா! நிறையா! மொழிவீரா..?

                புலவர் சா இராமாநுசம்

47 comments :

 1. தரமான படைப்புகளாக இரு நூறு பதிவுகள் தந்து
  பதிவுலகில் கவிபடைக்க முயல்வோர் அனைவருக்கும்
  நல் வழிகாட்டியாய் ஆசானாய் விளங்கும் தாங்கள்
  தொடர்ந்து இதுபோல் ஆயிரம் பதிவுகள் தர அருள வேணுமாய்
  எல்லாம வல்லவனை மனதார வேண்டுகிறேன்

  ReplyDelete
 2. இருநூறென்ன... இன்னும் பல நூறு நற்கவிதைகள் தங்களிடமிருந்து வர வேண்டும். அதற்காக மனமகிழ்வுடன் வாழ்த்துகின்றேன்!

  ReplyDelete
 3. இருநூறையும் தாண்டி இன்னும் பல படைப்புகள் படைத்திட வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 4. புலவர்ப் பெருந்தகையே
  மரபுக் கவிதைகளின் எமக்கான
  வழிகாட்டி நீங்கள்....
  இருநூறு ஈராயிரம் ஆகி வந்திட
  என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா..

  ReplyDelete
 5. இன்னும் பல நூறு பதிவுகள் எழுதி எங்களை மகிழ்வுறச் செய்ய எங்களது நல்வாழ்த்துகள் புலவரே....

  ReplyDelete
 6. சம்பந்தப் பட்டவர்களுக்கு குறையாக படலாம் ஆனால் புரிந்து கொண்டவர்கள் தவறாக எண்ண மாட்டார்கள் புலவரே

  ReplyDelete
 7. 200 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள், ஐயா.

  மேலும் பலநூறு என்ன ஆயிரமாயிரம் தங்களால் தர இயலும் என்ற நம்பிக்கை உள்ளது எங்களுக்கு.;)

  ReplyDelete
 8. நல்ல
  தரமான
  மரபு சார்ந்த
  கவிநயமான இருநூறு பாடல்கள்

  இன்னும்
  பலநூறு பாடல்கள்
  ஊருக்காகவும் உறவுக்காகவும்
  இசைக்கட்டும் கவிக்குயில்

  200 வது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 9. //இன்றென் பதிவு இருநூறே-நான்
  எழுதிடப் பெற்றேன்! பெரும்பேறே!//

  ஆயிரம் தொடுவீர் அதிவிரைவில் - நீவிர்
  எழுத்துலகில் ஓர் வானவில்!

  ReplyDelete
 10. வாழ்த்துகள் ஐயா!உங்கள் புலமைக்கு இரண்டாயிரத்தை எளிதாகக் கடப்பீர்கள்.என் ஐயன் நமச்சிவாயமும்,உங்கள் நாரயணனும் துணை நிற்பார்கள். வாழ்த்தி வணங்குகிறேன்.

  ReplyDelete
 11. \\தானே புயல்போல் என்னவளே-துயர்
  தாக்க மறைந்துப் போனதிலே
  வீணே! வாழ்வு இனியென்றே-மனம்
  வெதும்ப ஏங்கும் நிலையன்றே\\

  இந்த வரிகளைப் படிக்கையில் விழியோரம் ஈரம். மனந்தளரவேண்டாம் ஐயா. தங்கள் கவிதைகளால் எங்களை பலகாலம் மகிழ்வித்திருங்கள்.

  இருநூறு எட்டியதற்கு இனிய பாராட்டுகள். இன்னும் பலநூறு படைத்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. இன்றுதான் தங்கள் தளத்திற்கு வருகிறேன். வரும்போதே இருநூறு பதிவுக்கு வாழ்த்தும் வய்ப்பு எனக்கு. வாழ்த்துகிறேன் ஐயா.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ஜயா இன்னும் பல நூறு பதிவுகள் எழுதி கலக்குங்கள்

  ReplyDelete
 14. தங்களது இருனூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. இன்னும் இன்னும் நிறைய நிறைவாய் எழுத வாழ்த்துகள் ஐயா.உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு !

  ReplyDelete
 16. தமிழைக் காதலிப்பவர்களுக்கு தனிமை கொடுமை ஆகாது.
  இன்னும் எழுதிக் குவியுங்கள் அய்யா .
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் ஐயா! இன்னும் இன்னும் நிறைய பதிவுகளை நீங்கள் எழுதிட வாழ்த்துகிறேன்! இந்நேரத்தில், ஈழம் குறித்த உங்கள் கவிதைகளை நினைத்துப் பார்க்கிறேன்! அதற்காக நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன்!

  ReplyDelete
 18. Ramani said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 19. கணேஷ் said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 20. தமிழ்வாசி பிரகாஷ் said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. மகேந்திரன் said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 22. வெங்கட் நாகராஜ் said...


  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 23. suryajeeva said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 24. வை.கோபாலகிருஷ்ணன் said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 25. வாழ்த்துகள்

  ReplyDelete
 26. செய்தாலி said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 27. கே. பி. ஜனா... said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 28. சென்னை பித்தன் said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 29. கீதமஞ்சரி said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 30. ராஜி said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 31. K.s.s.Rajh said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 32. Sekar said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 33. ஹேமா said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 34. சிவகுமாரன் said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 35. ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 36. Jaleela Kamal said...

  வரவுதந்து, வாழ்த்தும் தந்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 37. இருநூறையும் தாண்டி இன்னும் பல படைப்புகள் படைத்திட வாழ்த்துகிறேன் ஐயா...

  ReplyDelete
 38. இந்த 'இரு நூறு' இருபது நூறாக ஆகணுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.

  ReplyDelete
 39. இன்னும் எழுதுங்கள் எங்க்ளுக்கு நீங்க் வ்ழிகாட்டி ஐயா தொடர்கின்றேன் உங்களை

  ReplyDelete
 40. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_13.html

  ReplyDelete
 41. நல்வாழ்த்துகள் சார்.

  ReplyDelete
 42. வாழ்த்துகள் சார். சந்தர்ப்பம் அமைந்தால் சந்திப்போம் சென்னையில்.

  ReplyDelete
 43. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. தொடர்ந்து 300, 400... என எழுத வாழ்த்துக்கள்..

  http://anubhudhi.blogspot.in/

  ReplyDelete
 44. ஹிந்தியாவே முடிவு செய்.
  தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

  -------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)

  ReplyDelete
 45. வணக்கம் ஐயா!
  200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...