Saturday, May 12, 2012

அன்னையர் தினம்!



சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?

உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

29 comments :

  1. வரிகலெங்கும் மெல்லிய சோகம் வழிந்தோட புனையப்பட்ட அருமையான கவிதை ..!

    ReplyDelete
  2. அன்னையர் தின கவிதை/ அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வரலாற்று சுவடுகள் said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. மனசாட்சி™said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. அன்னைய தின கவிதையின் மூலமாக நானும் அன்னையருக்கு வாழ்த்தை சொல்லிக் கொள்கிறேன்..

    ReplyDelete
  6. அன்னையர் தின நல் வாழ்துக்கள்.

    ReplyDelete
  7. தாய்மை ரொம்ப கடினாமான பிறப்பு... அதனால் தான் வரம் என்கிறார்கள் அதை. கற்ப காலம் பற்றி படித்து நான் கவிதை எழுதினேன்... கண்ணீருடன்...

    ReplyDelete
  8. அன்னையை நினைந்துருகிய அழகான கவிதை. மிக அருமை.

    ReplyDelete
  9. மதுமதி said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. விமலன் said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. GowRami Ramanujam Solaimalaisaid

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. பழனி.கந்தசாமி said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. கணேஷ்said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. புலவரே!எத்தனையோ பாடினீர்!
    அத்தனைக்கும் மகுடமாய் அன்னை.

    அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. இனிய அன்னையர் தின வாழ்த்துகள் .. தாயே தெய்வம்

    ReplyDelete
  16. அன்னையை நினைத்து , வரிகளை கண்ணீரால் நனைத்துப் பாடிய புலவரின் அன்புள்ளம் நிறைந்த கவிதை!

    ReplyDelete
  17. தாயின்
    உன்னதம் சொல்லும்
    குழந்தையின் பாசத்
    தாலாட்டு

    அன்னையர் தின வாழ்த்துக்கள் அய்யா

    ReplyDelete
  18. அய்யா!அன்னையின் அருமையை அழகுற தமிழில் சொன்னீர், நன்றி.
    தாயின் பெருமைகளை விளக்கும் கவிதை ஒன்றை நானும் படித்திருக்கிறேன். தாங்கள் படித்துக் கருத்தளித்தால் மகிச்சி அடைவேன்.

    ReplyDelete
  19. தாயின் புகழை எப்படிப் பாடினாலும் சலிக்காது ஐயா.தாயின் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெறுவோம் !

    ReplyDelete
  20. ராஜ நடராஜன் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. "என் ராஜபாட்டை"- ராஜா said...


    இனிய அன்னையர் தின வாழ்த்துகள்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. தி.தமிழ் இளங்கோ said...

    இனிய அன்னையர் தின வாழ்த்துகள்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. செய்தாலி said...


    இனிய அன்னையர் தின வாழ்த்துகள்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. T.N.MURALIDHARANsaid...

    இனிய அன்னையர் தின வாழ்த்துகள்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. ஹேமா said...

    இனிய அன்னையர் தின வாழ்த்துகள்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. பத்துமாதம் சுமந்தவளைக் காலமெல்லாம் நம் மனம் சுமக்கும் பேறு பெறுவோம். அன்னையைப் போற்றும் பா மிக அருமை. பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  27. “சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
    சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
    அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
    அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!“

    வலியை வார்த்தைக்குள் வரைந்திருக்கிறீர்கள்.
    அம்மாக்கள் பாவம் தான் புலவர் ஐயா.
    அருமைங்க.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...