Monday, August 27, 2012

வலையுலக வரலாறு போற்றும் கூட்டம்!jla


 வலையுலக வரலாறு போற்றும் கூட்டம்-சென்னை
    வலைப்பதிவு இளைஞர்களின் சாதனை! காட்டும்
அலைவழியே அகம்கண்டே பழகி வந்தார்-இன்று
    அன்புமுகம் காண்பதற்கே அலையாய் வந்தார்
இலைநிகரே எனப்பலரும் எடுத்துச் சொல்ல-வர
     இயலாரும் இல்லத்தே காண நல்ல
வலையுலக  திரட்டியவர் வசதி செய்தார்- அவரை
    வாழ்த்துகிறோம் ஒன்றாக, நன்றே செய்தார்

தானாக பொருள்தன்னை நாடி வந்தே-ஏதும்
   தன்னலமோ, எதிர்பார்போ இல்லார் தந்தே
தேனாக இனிப்பவராம் மக்கள் சந்தை-பாசத்
   தோழரைப் பாராட்டி மகிழ்வோம் சிந்தை!
நானாக இச்செயலை செய்தேன்!.? இல்லை!-என்
    நேசமிகு, பாசமிக இளையோர் ஒல்லை
மானாகத் துள்ளியவர் செய்தப் பணியாம்-மேலும்
   மட்டற்ற என்நன்றி அவர்கே அணியாம்

                                     (தொடரும்)

                         புலவர் சா இராமாநுசம்

  

  


38 comments :

 1. சிறப்பான கவிதை ஐயா.

  நேற்று என்னால் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை என்ற வருத்தம் எப்போதும் இருக்கும். நேரடி ஒளிபரப்பு காலை பார்த்தேன். மதியத்திலிருந்து அலுவலகம் சென்று விட்டதால் பார்க்க இயலவில்லை.

  சந்திப்பினை நிறைவாய் நடத்திய உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
 2. வணக்கம் கலந்த நன்றிகள் ஐயா

  ReplyDelete
 3. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி

  ReplyDelete
 4. 'அடையாறு அஜீத்' சென்னை பித்தனை பார்க்க பெருந்திரளாக வந்த ரசிகர்களுக்கு ஆனந்த கண்ணீரை சமர்ப்பிக்கிறேன்.

  ReplyDelete
 5. சென்னைப்பதிவர்களின் அன்பும்
  சுறுசுறுப்பும் எதையும் நேர்த்தியாக
  திட்டமிட்டு பதிவர் சந்திப்பை
  நடத்திய பாங்கும் ம்னம் தொட்டது
  பெரியவர்களின் வழிகாட்டுதலும்
  இளைஞர்களின் ஈடுபாடும் இருந்தால் எதையும்
  சாதிக்க முடியும் என்பதற்கு இந்த பதிவர்
  சந்திப்பு நல்ல உதாரணம்
  நீங்கள் இதை தங்கள் வாழ் நாள் சாதனையாக
  எண்ணி நிச்சயம் மகிழ்வு கொள்ளலாம்

  ReplyDelete
 6. உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா

  ReplyDelete
 7. உங்கள் எண்ணத்தால் உயர்ந்தோம் நன்றி அய்யா :-)

  ReplyDelete
 8. தங்களின் நீண்ட நாள் எண்ணம் நேற்று நிறைவேறியது ஐயா...

  இனி வருடாவருடம் தொடரும்.....

  ReplyDelete
 9. பதிவர் சந்திப்பு திருவிழா வைபோகமாக நடந்ததை நேரில் வந்து பங்கு பெறமுடியவில்லையே என்று இருக்கிறது ஐயா....

  அருமையான கவிதை ஐயா....

  வயது வித்தியாசமின்றி அன்பு மட்டுமே எல்லோரையும் ஒன்றாக இணைத்து மூத்தோரின் வழிநடத்தலில் சிறப்பாக நடந்தேறிய இந்த விழா இனியும் சரித்திரம் படைப்பது போல் வருடத்திற்கொருமுறை நடக்கும் என்ற நம்பிக்கை விதையையும் விதைத்திருக்கிறது... வருடா வருடம் இந்த சிறப்பான வைபவத்தில் கலந்துக்கொள்ள இயலாவிட்டாலும் ஏதேனும் ஒரே ஒரு முறை கலந்துக்கொள்ளவேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்துகிறது...

  அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு....

  ReplyDelete
 10. ஐய்யாவைச் சந்தித்தஅணக்கம் ஐயா.தில் மிக மகிழ்ச்சி. பெரியோருடன் இருப்பது அவர் பேச்சைக் கேட்பது எல்லாமே மனம் நெகிழ வைக்கும் விஷயம்.
  தங்கள் கவிதை அத்தனை நடப்புகளையும் குறள் வரிகள் போலப் பரிமளிக்கச் செய்து விட்டன.
  வணக்கம் ஐயா.

  ReplyDelete
 11. ஐயாவின் ஆசியுடன் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நன்றி ஐயா.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் ஐயா தங்கள் கனவு மிக
  சிறப்பாக ஒப்பேறியதை இட்டு நாமும்
  மிக மகிழ்கின்றோம் .இந்த சந்திப்பு மேலும்
  மேலும் தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 13. நல்ல கவிதை ஐயா சுருக்கமாகவும் விளக்கமாகவும் ......................

  ReplyDelete
 14. அழகிய கவிதை ஐயா! உங்களை நேற்று வீடியோவில் பார்த்தேன்! நீங்கள் எழுதிய கவிதைகள் நினைவுக்கு வந்து போயின! மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
 15. நேற்று அனைவர் உள்ளத்தால் உணர்ந்த

  உணர்வே தங்கள் கவிதை வெளிப்பாடு !

  நன்றி !

  ReplyDelete
 16. கவிதை அருமை ஐயா...

  வருடா வருடம் இன்னும் சிறப்பாக தொடர்வோம்...

  (த.ம. 12)

  ReplyDelete
 17. வெற்றிகளுக்கு வாழ்த்துகள் ஐயா ! கவிதை அருமை.

  ReplyDelete
 18. பதிவர் சந்திப்பு சிறப்பாக நிகழ்ந்தமைக்கு மகிழ்ச்சி!

  ReplyDelete
 19. உங்களுடன் கரம் கோர்த்து செயல்பட்டதில் மிகமிக மனநிறைவு எனக்கு- நன்றி ஐயா

  ReplyDelete
 20. http://josephinetalks.blogspot.com/2012/08/blog-post_26.html வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. சாதனைக்கும் கரம் கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை என்றாலும்
  நேரலையில் ரசித்தேன் அய்யா

  நல்லதொரு விதை விதைக்கபட்டு இருக்கு
  நாளை அது விருட்சமாய் வளரும் என்பதில் ஐயமில்லை
  உங்களைப் போன்ற மூத்த பதிவர்களின் பங்களிப்பு வியப்புக்குரியது அய்யா

  ReplyDelete
 23. சிறப்பான கவிதை., தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

  ReplyDelete
 24. விழா தங்களுடைய வழிகாட்டுதலின் கீழ், சிறப்பாக நடந்தேறியமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. இந்த பதிவர் சந்திப்பிற்கு துவக்கால சிந்தனைகளைத் தூவி செயல்பட்ட உங்களுக்கும் மற்றும் பாலகணேஷ், மதுமதி, சென்னை பித்தன், தென்றல் சசிகலா ஆகியோருக்கும், சிறப்பாகச் செய்த அனைவருக்கும் நன்றி!

  ReplyDelete
 26. அய்யா விழா மிக சிறப்பாக முடிந்ததில் எங்களை விட உங்களுக்கு தான் பெரும் மகிழ்வு என்பதை நான் உங்களின் முகத்தில் கண்டேன் ... உங்களின் அனுபவம் எங்களுக்கு பாடம் ...

  உள்ளம் நிறைந்த நன்றிகள் அய்யா

  ReplyDelete
 27. பதிவு விழா சிறப்பாக அமைந்தமைக்கு மகிழ்ச்சி. அய்யா! உங்களின் முயற்சியும் ஊக்கமும் இந்த விழா நடைபெற காரணம். உங்களுடன் இணைந்து இந்த விழா அமைய சிறப்பாக செயல்பட்ட அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்! நல்லதொரு நிகழ்வு.நான் அயல்நாட்டில் பணியில் இருப்பதால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.இருந்தும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நல்ல நிறைவுடன் இனிதே நிகழ்வு முடிந்தமைக்கு...அனைவருக்கும் பாராட்டுக்கள்!

  என் பதிவில் "வேண்டாம் தூக்கு கயிறு"..

  ReplyDelete
 28. வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ஐயா ....

  ReplyDelete
 29. உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா

  ReplyDelete
 30. உழைப்புக்கு மிகுந்த பாராட்டுகள். நிகழ்வின் பெரும்பகுதியை வீட்டிலிருந்தே பார்த்து மகிழ்ந்தேன். மீண்டும் உங்களுக்கும், உங்களின் இளைஞரணிக்கும் மிக்க நன்றியும் பாராட்டுகளும்.

  ReplyDelete
 31. பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

  மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

  http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள் ஐயா! சிறப்பான பதிவர் சந்திப்பு சாதனை படைத்தமைக்கு!

  இன்று என் தளத்தில்
  நினைவுகள்! கவிதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
  நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

  ReplyDelete
 33. நேரலையில் உங்களை கண்டேன் ஐயா!

  அருமையான கவிதை (TM 16)

  ReplyDelete
 34. புலவரைக் கண்டேன்.
  ஆம். தங்களைக் கண்டேன்.
  பூத்துக்குலுங்கும் மலர்களென
  பொங்கி வரும் ஆழி அலையெனத்
  திரண்டு வந்த தமிழ் பதிவர்களை,
  தீந்தமிழால், தம் புன்னகையால்
  வென்று நின்ற காட்சி கண்டு
  வியந்து நின்றேன்.

  தென்றலின் கனவின் அணிந்துரையில்
  சொல்லி முடித்த வார்த்தைகள் இரண்டே இரண்டு.
  " நுழையுங்கள். நுகருங்கள் ! " என
  அழகானவை மட்டுமல்ல.
  அசத்துபவை.

  வாழ்க தங்கள் தமிழ்த் தொண்டு.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 35. என்னால் பதிவர் திருவிழாவிற்கு வர முடிய வில்லை என்ற வருத்தம் தான். உங்கள் அனைவரையும் நேரலையில் கண்டது மகிழ்ச்சி, உங்கள் புகைப்படம் கண்டேன், வாழ்த்துக்கள் தோழா, என் தளத்திற்கும் கொஞ்சம் vangalen
  நான் பதிவுலகிற்கு ஒன்ற மாத குழந்தை.
  நன்றி

  ReplyDelete
 36. உங்களின் நீண்ட நாள் கனவு
  நினைவானதைக் குறித்து
  உங்களுடன் நானும் மகிழ்கிறேன்.

  அழகான நன்றி மடல்...!!
  வணங்குகிறேன் புலவர் ஐயா.

  ReplyDelete
 37. அய்யா,
  இனிய சந்திப்பு
  நன்றி

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...