Thursday, September 6, 2012

எத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே எதிர்க்க நம்படை நிறுத்திடுவீர்




மீண்டும்  மீண்டும்  வருகின்றான்-நம்
     மீனவர் வலையை அறுக்கின்றான்
 தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும்
     துயரக் கண்ணீர் வடிக்கின்றார்
 ஈண்டும் ஆட்சி மாறியதே-ஆனால்
    எனினும் பழைய காட்சியதே
 வேண்டும் துணிவு அதுவொன்றே-அவர்
    வேதனை போக்கும்  வழியின்றே


எத்தனை தரம்தான் போவார்கள்-சிங்ளர்
    எடுபிடி யாக  ஆவார்கள்
மொத்தமாய் போய்விடும் தன்மானம்-அங்கே
    மேலும் போவது அவமானம்
புத்தியில் அவருக்கு கோளாரே-புனித
     புத்தரே சொல்லினும் கேளாரே
எத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே
    எதிர்க்க நம்படை நிறுத்திடுவீர்


ஆறினால் சோறு பழஞ்சோறே-ஆளும்
   அம்மா   அவர்கே   கதியாரே
கூறினால் மட்டும் போதாதே-அழுத்தம்
   கொடுப்பீர் மத்திக்கு இதுபோதே
மீறினால் வருமே போராட்டம்-என
    மத்தியில் ஆள்வோர் உணரட்டும்
மாறினால் அவர்கள் மாறட்டும்-இன்றேல்
    மக்களை அரசே திரட்டட்டும்

பிடித்த மீனையும் அள்ளுகின்றான்-படகை
  பிணைத்து இழுத்துத் தள்ளுகின்றான்
அடித்தான் இன்றும் தொடர்கதையா-இந்த
  அவலம் மீனவன்  தலைவிதியா
தடுக்க மத்திக்கு வக்கில்லை-ஆளும்
  தமிழக அரசே உடன்ஒல்லை
எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய்
  எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை

                   புலவர் சா இராமாநுசம்  

23 comments :

  1. உண்மையான சம்பவங்கள்...அழகு வரிகளிலி உங்கள் பாணியில் அழகாக இருக்கிறதி ஐயா

    ReplyDelete
    Replies


    1. வருகைக்கு நன்றி! வணக்கம் கணக்கில!

      Delete

  2. ஒவ்வொரு வரிகளிலும் என்ன ஒரு தனித் தன்மை !!!!.......
    உங்கள் ஆசி என்றும் எமக்கு வேண்டும் ஐயா .
    வாழ்த்துங்கள் கவி பாடும் நல் மனதாலே இன்றும்
    என் தளத்தில் ஒரு பாடல் வெளியிட்டுள்ளேன்
    அதற்க்கு தங்கள் பொன்னான கருத்தை எதிர்
    பார்க்கின்றேன் ஒரு குருவிடம் ஏழை சிஷ்யை போல்
    நானும் .

    மீண்டும் மீண்டும் வருகின்றான்-நம்
    மீனவர் வலையை அறுக்கின்றான்
    தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும்
    துயரக் கண்ணீர் வடிக்கின்றார்
    ஈண்டும் ஆட்சி மாறியதே-ஆனால்
    எனினும் பழைய காட்சியதே
    வேண்டும் துணிவு அதுவொன்றே-அவர்
    வேதனை போக்கும் வழியின்றே

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கு நன்றி! வணக்கம் கணக்கில!

      Delete
  3. கவிதையில் நீங்கள் சொல்வது பலருக்கும் புரியவில்லை.சுற்றுலாப் பயணிகளின் மீதான தாக்குதல் பலரிடமும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.அதற்கான அடிப்படைக் காரணங்கள் மட்டும் இன்னும் உறங்கிக்கொண்டே உள்ளன.

    ReplyDelete
  4. மீனவர் தமிழனாய் பிறந்ததனால் சிங்ளர் அடிகின்றான்

    ReplyDelete
    Replies


    1. வருகைக்கு நன்றி! வணக்கம் கணக்கில!

      Delete
  5. மீனவ பிரச்சனையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது கவிதை! என்று தீரும் இந்த மீனவர் சோகம்! நன்றி ஐயா!

    இன்று என் தளத்தில்
    வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

    ReplyDelete
    Replies


    1. வருகைக்கு நன்றி! வணக்கம் கணக்கில!

      Delete
  6. ஐயாவின் ஆதங்கத்தில் தோய்ந்த இந்தக் கவிதையின் வார்த்தைகளின் இடைவெளிகளில் அறச்சீற்றத்தின் அம்புகள்
    அடுக்கி வைத்திருப்பதைக் காண முடிகிறது.

    ReplyDelete
    Replies



    1. வருகைக்கு நன்றி! வணக்கம் கணக்கில!

      Delete
  7. வேதனையான கவிதை.
    நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies



    1. வருகைக்கு நன்றி! வணக்கம் கணக்கில!

      Delete
  8. இந்த நிலை மாறியே தீர வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி! வணக்கம் கணக்கில!

      Delete
  9. வேதனைதான்.
    கவிதை சிறப்பு ஐயா

    ReplyDelete
    Replies


    1. வருகைக்கு நன்றி! வணக்கம் கணக்கில!

      Delete
  10. புலவர் ஐயா,உங்கள் கருத்துக்காகக் காத்திருக்கிரது என் கவிதை முயற்சி!-http://kuttikkunjan.blogspot.in/

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கு நன்றி! வணக்கம் கணக்கில!

      Delete
  11. சுயநல அரசியல் வியாதிகள் உள்ளவரை தமிழன் கண்ணீர் ஓயாது. அவலத்தைவிதைப்பவர்க்கு என்று நாம் அவலத்தைக் கொடுக்கின்றோமோ அன்று தான் எமக்கு விமோசனம். புலவர் அவர்களின் கவிதைகள் என்றும் என் மனதைகொள்ளை கொண்டவை. நன்றி.

    ReplyDelete
    Replies


    1. வருகைக்கு நன்றி! வணக்கம் கணக்கில!

      Delete
  12. உண்மையை கவிதையாய் சொல்லிருகிறிர்கள்....மிகவும் அருமை....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...