Tuesday, October 2, 2012

அண்ணலே காந்தி நீங்கள்-மீண்டும் அவனியில் பிறக்க வேண்டும்!




அண்ணலே காந்தி நீங்கள்-மீண்டும்
  அவனியில் பிறக்க வேண்டும்!
கண்ணியம் இல்லாக் கையர்-ஊழல்
  கறையது மிகுந்த பொய்யர்!
எண்ணிலார் மிகுந்து விட்டார்-இங்கே
  ஏழைகள் துயரப்  பட்டார்!
புண்ணிய வந்தே பாரீர்-மக்கள்
  புலம்பலை நீக்க வாரீர்!

உத்தம காந்தி நீங்கள் மீண்டும்
  உதித்திட வேண்டும் வேண்டும்!
எத்தர்கள் செயலால் இங்கே என்றும்
  ஏழ்மைக்கும் விடுதலை எங்கே?
சித்தமே கேட்கும் கேள்வி அன்று
  செய்தீரே தியாக வேள்வி!
புத்தரே காந்தி நீவீர்-உடன்
  பூமியில் பிறந்து காவீர்!

தன்னலம் இல்லாத் தொண்டே நீர்
  தந்ததை  மக்கள் கண்டே!
பொன்னென மக்கள் போற்றி அறப்
  போரினை உம்மொடு ஆற்றி,
கண்ணெணப் பெற்ற விடுதலை இன்றே
   கயவரால் உற்ற கெடுதலை
எண்ணியே நீக்க வாரீர் !மக்கள்
  இன்னலைப் போக்க வாரீர்!

               புலவர் சா இராமாநுசம்

24 comments :

  1. சிறப்பான வரிகள் ஐயா...

    சுதந்திரம் பெற்றுத் தந்தார்...

    பலரிடமிருந்து, பலவற்றிலிருந்து விடுதலை பெற மீண்டும் காந்தி பிறக்க தான் வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி! மீண்டும் வருக! மறுமொழி தருக!

      Delete
  2. நாட்டுக்கு உழைத்த நல்ல தலைவருக்கு நல்லதோர் கவிதை!

    ReplyDelete
  3. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலின்றும் நீங்காத ஒரு ஆன்மா காந்தித் தாத்தா.
    அவர் தேவையும் அவர் பெருமையையும் சொல்லும் வரிகள் அழகு

    ReplyDelete
    Replies

    1. நன்றி! மீண்டும் வருக! மறுமொழி தருக

      Delete
  4. // உத்தம காந்தி நீங்கள் –மீண்டும்
    உதித்திட வேண்டும் வேண்டும்!//

    அண்ணலை மீண்டுமிங்கு அழைத்திட வேண்டுமென்னும்
    எண்ணமே உந்துவிக்க எழுதினீர் கவிதையொன்று
    விண்ணிலே இருந்துபார்த்து விசனமே கொண்டிருப்பார்
    மண்ணிலே மீண்டபோதும் மானுடர் திருந்துவாரோ?

    வாழ்க அண்ணலின் புகழ்!

    ReplyDelete
  5. நாட்டுக்கு உழைத்த எங்கள் காந்தி தாத்தாவுக்கு என் மனமார்ந்த நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. நன்றி! மீண்டும் வருக! மறுமொழி தருக

      Delete
  6. ஐயா தங்களைப்போலவே என் சிந்தையும் இன்று மகாத்மாவை மறுபடி பிறந்து வர வேண்டினேன்.

    ReplyDelete
    Replies

    1. நன்றி! மீண்டும் வருக! மறுமொழி தருக

      Delete
  7. உத்தம காந்தி நீங்கள்
    உதித்திட வேண்டும்

    வாழ்க காந்தி புகழ்!

    ReplyDelete
    Replies


    1. நன்றி! மீண்டும் வருக! மறுமொழி தருக

      Delete
  8. மிக அருமையான கருத்துகளுடன் ஓர்
    உருக்கமான வேண்டுகோள் அந்த உத்தம
    புருசருக்கு !!!!.........வாழ்த்துக்கள் ஐயா
    எல்லோரது எண்ணமும் இதுதான் இது நிறைவேற .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies


    1. நன்றி! மீண்டும் வருக! மறுமொழி தருக

      Delete
  9. திரும்பவும் ஒரு முறையா இங்கே பிறப்பது ?

    அன்று ஒரு கோட்சே அவர் உயிரைக் கொய்தான்.
    இன்றோ ஒரு நூறூ கோடி மக்களும் அவர் வாழ்ந்த கொள்கைகளைப் புறக்கணித்து பொய்யான வாழ்க்கை வாழ்கிறோம்.

    மதுவிலக்கு, அஹிம்சை, சத்தியம், நேர்மை, தாம் பெற்ற செல்வத்தையும் ஒரு அறக்கட்டளைக்கு நிர்வாகியாக‌
    தன்னை எண்ணிக்கொண்டு செயல்படவேண்டுமென்ற மனம், சாதி மதங்களுக்கும் எல்லாம் அப்பாற்பட்ட‌
    ஒரு மனித நேயம், பகைவனிடத்திலும் இரக்கம் காட்டிடும் பெருந்தன்மை,
    இவற்றில் ஒன்றாவது இன்று எங்காவது இருக்கிறதா ?

    இந்தியாவில் இனி காந்தி பிறந்தால், அவருக்கு ஒரு கோட்சே தேவையில்லை.
    அவரே தன் உயிரை உண்மையான உண்ணாவிரதம் கொண்டு மாய்த்துக்கொண்டு விடுவார்.

    ஆகவே, காந்தியாரே !
    அங்கேயே இருங்கள்.

    ஆண்டுக்கொரு முறை நாங்கள்
    உங்கள் நினைவை ப்போற்றுவது கூட எங்கேனும் நின்றுபோய் விடப்போகிறது !!

    வேதனையுடன்,
    சுப்பு தாத்தா.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies

    1. நன்றி! மீண்டும் வருக! மறுமொழி தருக

      Delete
  10. எத்தனை காந்தி வந்தாலும் இவர்களைத் திருத்த முடியாது
    கவிதை அருமை.

    ReplyDelete
    Replies


    1. நன்றி! மீண்டும் வருக! மறுமொழி தருக

      Delete
  11. ஐயோ.... வேண்டாம் புலவர் ஐயா.

    அவர் அங்கேயே சந்தோஷமாக இருக்கட்டும்.

    கவிதை அருமை ஐயா.

    ReplyDelete
    Replies

    1. நன்றி! மீண்டும் வருக! மறுமொழி தருக

      Delete
  12. மிக நல்ல கவிதை.
    இரசித்தேன்.
    நன்றி ஐயா.
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
    Replies


    1. நன்றி! மீண்டும் வருக! மறுமொழி தருக

      Delete
  13. அய்யா இங்கே எண்ணற்ற, காந்திகள் உள்ளனர்.கோட்சோகள் பல மடங்கு பெருகி விட்டனர் .இன்றைய காந்திகள் இக்கயவர்களை எதிர்கொள்வதில்லை .அருமையான கருத்துக்கள் அய்யா .வளர்க உங்கள் கவிவளம் . அன்புடன் கருப்பசாமி

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...