Thursday, October 18, 2012

இன்றென் பிறந்த நாளாம்! எண்பத்தி ஒன்றும் ஆக !
எண்பதும்  நிறைந்து  போக-வயது
   எண்பத்தி ஒன்றும் ஆக
நண்பரே! வாழ்த்தும் நன்றே நாளும்
  நலம்பெற சொல்வீர் இன்றே
உண்பதும் குறைத்துக் கொண்டேன் நல்
   உடல்நலம் பேணக் கண்டேன்
பண்புடைய உறவே பெற்றேன் வலை
   பதிவரால் உவகை உற்றேன்

உள்ளுவ உயர்வு என்றே முன்னோர்
   உரைத்திட்ட வழியில் சென்றே
கொள்ளுவ கொண்டேன்  வாழ ஐயா
   குறையின்றி மகிழ்வும் சூழ
எள்ளுவார் எள்ளும் போதும் நான்
    எண்ணிய தில்லை ஏதம்
வள்ளுவர் வழிதான் வாழ்வாம் அவ்
    வழிமாறின் வருதல் தாழ்வாம்

வரவுக்கும்  ஏற்ற செலவே என
    வாழ்ந்ததால் துன்பம் இலவே
உறவுக்கும் கைகொ டுப்பேன் என்
   உரிமைக்கும் குரல் கொடுப்பேன்
கரவுக்கும் இடமே இன்றி-நல்
    கடமையில் உள்ள மொன்றி
பொறுமைக்கும் இடமே தந்தேன் வீண்
   புகழெனில் ஒதுங்கி வந்தேன்

உற்றவள் துணையால் தானே வாழ்வில்
   உயர்வினை அடைந்தேன் நானே
பெற்றநல் பிள்ளைகள் பெண்கள் தினம்
    பேணிடும் என்னிரு  கண்கள்
கற்றவர் கடமை என்றே அவர்
   காத்திட நானும் இன்றே
நற்றமிழ் கவிதை தன்னை மேலும்
    நல்கிடச் செய்தார் என்னை

                     புலவர் சா இராமாநுசம்


75 comments :

 1. இந்த இனிய நாளில் என்னைப் போன்றோரை நீஙகள் தான் வாழ்த்தவேண்டும் ஐயா..என்றும் இன்று போல இளமையாய் இருக்க இதயங்கனிந்த எனது வாழ்த்துகள் ஐயா..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
  அழகாக சொல்லியிருக்கிறீர்கள்
  முன்னமே தெரியப்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக கொண்டாடியிருக்கலாமே.....

  மீண்டும் வாழ்த்துகிறேன்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 3. எண்பது வருட அனுபவத்தை ஒரு பக்க கவிதையாக்கி உரைத்திட்டீர்!என்னுடைய தந்தையைப் போன்றவரே! புலவரே! வாழ்த்த வயதில்லை! வணங்குகின்றேன்!

  ReplyDelete
 4. இன்னலைப் போக்கும் விழி முன்
  ஏற்றினேன் தீபம் ஒன்றை
  உன் மன வானில் என்றும்
  உலவிடும் நட்சத்திரம்போல்
  என்னையும் வாழிய என்று வாழ்த்திடு
  இன்பக் கவியமுதே நீயும் !!!!!...

  ReplyDelete
 5. மாண்புமிகு புலவரே,

  வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன் என்று ஒதுங்கப் போவதில்லை! வாழ்த்த மனது போதும். வயதென்ற எண் எதற்கு? எனவே, மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! வாழ்க பல்லாண்டு!

  ஸ்ரீ....

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 6. அன்பான வாழ்த்துக்கள்! Many more happy returns!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 7. ஐயா அவர்களின் இனிய பிறந்தநாளில் உங்களை வாழ்த்தி வணங்குகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா!!!!!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 8. வாழ்த்துக்கள் ஐயா ! உங்கள் அனுபவத்தின் வயதின் கால் மூன்றில் ஒரு பங்குக் கூட நானில்லை ... நோய் நொடியின்றி இன்று போல் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் ! :)

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 9. வாழ்த்த வயதில்லை...வணங்குகிறேன் புலவரே...

  ReplyDelete
 10. வணங்குகிறேன்.
  நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 11. பிறந்த நாள் வாழ்த்துக்கள். அப்போ உங்க பிறந்த நாள் 19-10-1932, சரீங்களா?

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 12. மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்து(க்)கள் ஐயா.

  என்றும் அன்புடன்,
  துளசியும் கோபாலும் (நியூஸிலாந்து)

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 13. "நூறாண்டு காலம் வாழ
  நோய் நொடி இல்லாமல் வளர
  ஊராண்ட மன்னர் புகழ் போலே
  உலகாண்ட புலவர் தமிழ் போலே "
  மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 14. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் புலவர் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 15. தங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 16. அன்பின் ஐயா, இன்னும் பல்லாண்டு பல்லாண்டு தாங்கள் முழு உடல்நலத்துடனும் மனமகிழ்வுடனும் வாழவும், உங்கள் கவிதைகளால் எங்களை மகிழ்விக்கவும் வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஐயா!

  ReplyDelete
 17. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 18. அன்பின் அய்யா, தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 20. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.வேங்கடவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும்,நிறைந்த ஆரோக்கியத்தையும்,குறையாத செல்வத்தையும்,அளவில்லா மகிழ்ச்சியையும் அளிக்கப் பிரார்த்திக்கிறேன்.உங்களை வணங்கி ஆசி வேண்டுகிறேன்!

  ReplyDelete
 21. ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ நீங்கள் வணங்கும் பெருமாள் அருள் புரிவார்.

  எங்கள் அனைவரையும் வாழ்த்தி ஆசீர்வாதம் செய்யுங்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 22. பல நூறு ஆண்டுகள் எங்களை ஆசிர்வதித்து மரபுக்கவிதைகளால் எங்களை மகிழ்வித்து வாழ வேண்டுகிறேன் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 23. வணக்கம் ஐயா
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  உங்களை வணங்கி நிற்கிறேன் ஐயா.

  ReplyDelete
 24. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 25. தமிழ் போல நீங்களும் என்றும் ஆரோக்கியத்துடன் மனமகிழ்வுடன் வாழ வேண்டுமென்று வாழ்த்தி இறைவனை வேண்டுகின்றேன் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 26. வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 27. மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 28. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 29. ஐயாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களும் வணக்கங்களும்..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 30. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நலமுடன் வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 31. Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 32. உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும் அய்யா ..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 33. வணக்கம் ஐயா! தங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களை விழைந்து நிற்கும்
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 34. வணக்கம் அய்யா! உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை வணங்குகிறேன்... தமிழ் தொண்டு நலமுடன் என்றும் தொடரட்டும்...

  ReplyDelete
 35. மேலும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து நீவீர் தமிழ்க் கவி படைக்க இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 36. அன்பும் அறமும் கொண்டவரே!
  அருமை வாழ்வைப் பெற்றவரே!
  என்பும் தோளும் போர்த்திருக்கும்
  இதயம் வாழும் தெய்வம்ம்மே!
  என்றும் ஆல்போல் செழித்தோங்கி
  எழுத்தில் தமிழ்போல் வளமோங்கி
  நன்றாய் என்றும் வாழ்கவென
  நானும் வாழ்த்தி வணங்குகிறேன்.


  அன்புடன்
  அருணா செல்வம்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 37. நீங்கள் இது போன்று பல பிறந்தநாள் காண படைத்தவனை வேண்டிகொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 38. தமிழுக்கு வயதாவதில்லை அய்யா.. தங்கள் ஆசிகளுக்கு வேண்டி நிற்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 39. வணக்கம் புலவர் ஐயா.

  இன்று போல என்றும் தமிழ் பதிவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும் தாங்கள்.

  இனி வரும் நாட்களும் இன்று போல இனிமையாக இருக்கட்டும் என்று இறைவனைப் பிரார்த்திகிறேன்.

  ReplyDelete
 40. மிக்க நன்றி!

  ReplyDelete
 41. மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அப்பா....

  உங்களிடம் தொலைபேசியப்பின்பு..... பலமுறை இங்கு வந்து பார்த்தேன். ஆனால் என்னால் கருத்து இடமுடியாதவாறு கமெண்ட் பாக்ஸ் தெரியவில்லை....

  மனம் நிறைந்த அன்பு உங்க குரலில் கேட்டேன் அப்பா...
  எல்லோரும் நலமாக இருக்கவேண்டும் என்ற உங்கள் வாத்ஸல்யமான மனதை கண்டேன்....
  எல்லோரும் நலமாயிருக்க வேண்டும் எங்கள் அப்பாவும் என்றும் சௌக்கியமாக நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், தேக ஆரோக்கியம் பெற்று என்றும் நலமுடன் வாழ இறைவனிடம் அன்பு பிரார்த்தனைகள் அப்பா...

  உங்களிடம் தொலைபேசியது மனதுக்கு நி்றைவு அப்பா...

  கவிதை வரிகளில்.... நீங்கள் வாழ்ந்த அருமையான அன்பான வாழ்வைக்கண்டேன்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 42. புலவர் பெருமானுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 43. இன்னும் ஒரு நூற்றாண்டிரும் புலவர் ஐயா!

  ReplyDelete
 44. நல்வாழ்த்துகள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 45. பொறுமைக்கும் இடமே தந்தேன் –வீண்
  புகழெனில் ஒதுங்கி வந்தேன்

  அதனால் தான் இன்றும் உயர்ந்து நிற்கிறீர்கள்
  நிமிர்ந்து நடக்க முடியுது

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...