அந்தோ மறைந்தீர் அன்பர் மணியே -துயர்
அஞ்சலி செய்திட கண்ணீர் வழியே
சிந்திட
துளிகளைச் சென்றீர் எங்கே -உடன்
செப்புவீர் நண்ப! செயலற்று இங்கே
வெந்திடப்
பலரும் வேதனைத் தீயில் -உமக்கு
விரைந்துமே திறந்ததேன் மரண வாயில்
தந்தனை
உயிரை தவித்திட உறவே -யாரும்
தாங்கிட இயலா உமது மறைவே!
பதிவர்
திருவிழா பாங்குற நடைபெற -அன்று
பார்த்தவர் அனைவரும் பாராட்டி விடைபெற
மதிய
உணவினை மாண்புற அளித்தீர் –வந்தவர்
மலர்முகம் கண்டே உள்ளம் களித்தீர்
நிதியதில்
உமதுப் பங்கும் உண்டே –
உம்
நிகரில்
உழைப்பே மறவாத் தொண்டே
விதியென
ஒன்றும் உண்டென அறிவேன் –அதன்
விளைவென உணர்ந்தா ? ஆறுதல் பெறுவேன்
வந்தவர்
எல்லாம் போவது உண்மை –இது
வாழ்வியல் ! உலகில் ! இயற்கைத் தன்மை
சிந்தனை
எனக்குத் தோன்றிய போதும் –நெஞ்சில்
செப்பிட இயலா துயரே மோதும்
உந்தனை
இழந்த உணர்வே மிஞ்சும் –என்றும்
உள்ளத்தில்
உமது நினைவே துஞ்சும்
வந்தனை
செய்வோம் வாழும் வரையில் –பதிவர்
வரலாற்றில்
சிறப்பிடம் பெற்றீர் வலையில்!
புலவர் சா இராமாநுசம்
உந்தனை இழந்த உணர்வே மிஞ்சும் அருமை சகோ எங்க பக்கமும் வந்து போங்க நட்பு வளர்துக்குவோம்
ReplyDeleteதங்கள இரங்கலுக்கு நன்றி!
Deleteஅன்னாரின் இழப்பின் வேதனையில் நாங்களும் பங்கு கொள்கிறோம் ஐயா!
ReplyDeleteதங்கள இரங்கலுக்கு நன்றி!
Deleteஅவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...
ReplyDeleteதங்கள இரங்கலுக்கு நன்றி!
Deleteயார் அந்த மணி ?....தங்களின் கண்ணீர் அஞ்சலி மனதில்
ReplyDeleteவேதனையை மட்டும் அல்ல ஐயா தங்கள் மதிப்பிற்கும்
மரியாதைக்கும் உரிய அந்த ஆன்மா யார் என்று அறிய மனம்
துடிக்கிறது .எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தங்களுக்கும்
இறந்தவர் குடும்பத்தினரிற்கும் தெரிவித்துக் கொள்கின்றேன் .
இந்த ஆன்மா சாந்திபெற இறைவனருள் கிட்டட்டும் !....:( நன்றி
ஐயா துயர் பகிர்வுக்கு .
தங்கள இரங்கலுக்கு நன்றி!
Deleteதிரு மணி அவர்களின் அகால மரணம் அதிர்ச்சியைத் தந்தது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்.
ReplyDeleteதங்கள இரங்கலுக்கு நன்றி!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதங்கள இரங்கலுக்கு நன்றி!
Deleteஅன்னாரது மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!
ReplyDeleteதங்கள இரங்கலுக்கு நன்றி!
Deleteஅவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
ReplyDeleteதங்கள இரங்கலுக்கு நன்றி!
Deleteஎனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteதங்கள இரங்கலுக்கு நன்றி!
Deleteஎங்களின் மன உணர்வுகளை அப்படியே கவிதையில் பிரதிபலித்திருக்கிறீர்கள். உண்மைதான். மனதை விட்டு நீங்காத நினைவுகளை நமக்கென விட்டுச் சென்றிருக்கிறார் மணி. அவரது மறைவிற்கு கனத்த மனதுடன் என் அஞ்சலி.
ReplyDeleteதங்கள இரங்கலுக்கு நன்றி!
Deleteஆழ்ந்த அனுதாபங்களை அற்புதமாக வடித்துள்ளீர்கள் ஐயா! நன்றி!
ReplyDeleteதங்கள இரங்கலுக்கு நன்றி!
Deleteஉந்தனை இழந்த உணர்வே மிஞ்சும் அருமை சகோ எங்க பக்கமும் வந்து போங்க நட்பு வளர்துக்குவோம்
ReplyDelete