Wednesday, December 26, 2012

உண்ணுகின்ற உணவுதனை தந்தோ னின்றே – நஞ்சு உண்ணுகின்றான் சாவதற்கே கொடுமை யன்றே!
உண்ணுகின்ற  உணவுதனை   தந்தோ  னின்றே நஞ்சு
   உண்ணுகின்றான்  சாவதற்கே  கொடுமை  யன்றே!
எண்ணுதற்கே   இயலாத   துயரந் தானே அதை
    எண்ணுகின்ற  அரசுகளும்  இல்லை  வீணே!

பாடுபட்டு   இட்டபயிர்   கருகிப்  போக தீயும்
   பற்றிவிட   வயிரெரிந்து  உருகிச்  சாக
மாடுவிட்டு  மேய்க்கின்ற  காட்சி  காண்பீர் நல்
   மனங்கொண்டார்  அனைவருமே  கண்ணீர்  பூண்பீர்!

இட்டபயிர்  இட்டவனே  அழிக்கும்   நிலையே இன்று
   இருக்கிறது   தமிழ்நாட்டின்  வறட்சி  நிலையே!
திட்டமில்லை  தீர்பதற்கும்  முயற்சி  இலையே உழவன்
    தேம்பியழின்    வைப்போமா   அடுப்பில்  உலையே!

நிலத்தடி  நீர்கூட  எடுக்க  இயலா சோக
    நிலைதானே  மின்வெட்டும்  பாழும்  புயலாய்!
அலகிட்டு   சொல்வதற்கும்  முடியா  வகையே மக்கள்
      அன்றாட  வாழ்க்கையிலே தீராப்  பகையே!

நெய்வேலி  கல்பாக்கம்   இருந்தும்  இங்கே நாளும்
    நிலையான  மின்வெட்டே !ஆனால் பங்கே !?
பொய்வேலி  ஏகமெனல்  இந்திய  நாடே என்ற
   போதனை  கேட்டதால்   வந்தக்  கேடே!

கத்தியும்  கதறியும்  மக்கள் ஓய கேளாக்
     காதென  சங்கொலி சென்றுப்  பாய,
சித்தமும்  கலங்கியே  செய்வ தறியார் கல்லில்
    செதுக்கிய  சிலையென  இருப்பர்  உரியார்!

பஞ்சமும்  பசியுமே  வாட்டும்  போதே இன்று
    பதவிசுகம்  காண்பார்கள்  உணர்வார்  தீதே!
கொஞ்சமும்  அக்கறை   எடுப்பார்  இல்லை பல
    கட்சிகளும்  இருந்துபயன்!?  ஒற்றுமை இல்லை!

நாதியற்றுப்  போனாரே   உழைக்கும்  மக்கள் வாழும்
     நம்பிக்கை   ஏதுமின்றி  ஏழை  மக்கள்
வீதிவலம், போராட்டம்  நடத்து  கின்றார் இன்னும்
     வேற்றுமையில்  ஒற்றுமை  இதுவா ? என்றார்!

                             புலவர்  சா  இராமாநுசம்
    

31 comments :

 1. ஒவ்வொரு கவளம் உண்ணும் போதும்
  உறுத்தல் கொள்ளச் செய்யும் பதிவு
  என்று இவர்கள் இன்னல் போம் ?
  சிந்தனையில் சூடேற்றிப்போகும் பதிவிற்கு
  மனமார்ந்த நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புது வருட நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

   Delete
  2. நாதியற்றுப் போனாரே உழைக்கும் மக்கள் –வாழும்
   நம்பிக்கை ஏதுமின்றி ஏழை மக்கள்
   வீதிவலம், போராட்டம் நடத்து கின்றார் –இன்னும்
   வேற்றுமையில் ஒற்றுமை இதுவா ? என்றார்!//

   விவசாயி உட்கார்ந்தால் வயிற்றுக்கு சோறேது?

   Delete
  3. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

   Delete
 2. Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

   Delete
 3. தமிழக மக்களின் இன்றைய யதார்த்த நிலையினை
  கவிதையாக்கிக் கலங்க வைத்துவிட்டீர்கள் அய்யா.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

   Delete

 4. விவசாயிகளின் நிலையை இதை விடஅழுத்தமாகச் சொல்ல முடியாது

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

   Delete
 5. // இன்னும்
  வேற்றுமையில் ஒற்றுமை இதுவா ? //
  நெற்றிபொட்டில் அடிப்பது போன்ற சொற்றொடர். கேட்கவேண்டியவர்கள் காதில் விழுமா?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

   Delete
 6. இன்று விவசாய நிலங்கள் அனைத்தும் வீடுகளாகவும் ஷாப்பிங் மால்களாகவும் மாறி வருகிறது. நாம் அரிசிக்காகவும் காய்கறிக்காகவும் அடுத்த நாட்டிடம் கையேந்தவேண்டி வந்துவிடுமோ என்ற அச்சம் வருகிறது...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

   Delete
 7. உண்ணுகின்ற உணவுதனை தந்தோ னின்றே – நஞ்சு
  உண்ணுகின்றான் சாவதற்கே கொடுமை யன்றே!
  எண்ணுதற்கே இயலாத துயரந் தானே –அதை
  எண்ணுகின்ற அரசுகளும் இல்லை வீணே!

  உலகின் அச்சாணியான உழவர்களின் அவலமான வாழ்வு ..

  ReplyDelete
 8. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

  ReplyDelete
 9. நாதியற்று போகின்றவர்கள் தான் உழைக்கும் மக்கள் என்று மேல்தட்டு வர்கம் சொல்லிச் செல்கிறது ஐயா..என்ன கொடுமை..

  ReplyDelete
 10. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 11. உழவர்கள் படும் துயரைத் தன் துயர்போல் மதித்து
  இந்தப் புலவர் ஐயா வடித்த கவிதையில் நெஞ்சம்
  வாடிப் போனது இன்று ...இக் கவிதையைக் கூட அறிய
  வேண்டிவர்கள் அறிந்து கொண்டால் உழைக்கும் மக்கள்
  அவலங்கள் தீராதோ !..........:(

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

   Delete
 12. அருமையான கருத்துள்ள கவிதை புலவர் ஐயா.

  த.ம. 7

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

   Delete
 13. இன்று மடியும் இக்கொடுமை!என்றவர்தம் இன்னல்கள் தீரும்?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

   Delete
 14. கருத்துள்ள ஓர் கவிதை!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

   Delete
 15. அழுத்தமான வரிகள் ஐயா

  ReplyDelete
 16. இன்றைய நிலைமையில் தேவையான கவிதை !

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...