Wednesday, February 6, 2013

வருகின்றான் வருகின்றான் கொலைகாரப் பாவி !




வருகின்றான்   வருகின்றான்  கொலைகாரப்  பாவி அவனை
      வரவேற்பு  செய்வதா  மலர்தன்னைத்  தூவி
தருகின்றான்  மீனவர்க்கு  நாள்தோறும்  தொல்லை இதை
      தடுத்திட  இயலாதார்  தமிழனே  இல்லை
தெருதன்னில்  திரிகின்ற  நாயுக்கும்  உண்டே  -பொல்லாத்
      தீயோரைக்  கண்டாலே  குரைத்திடும்   கண்டே
திருவன்ன  திருப்பதி  வேங்கட  நீயே அவன்
       திரும்பியே  சென்றிடச் செய்திடு  வாயே

இரக்கமே  இல்லாதும்  எம்மவர்  தம்மை அன்று
       இரத்தமே  ஆறாக   ஓடியே  செம்மை
நிறத்தையே  ஈழமே  பெற்றிடக்  கொன்றான் நஞ்சு
       நிரம்பிய  குண்டினைப்  போட்டுமே  வென்றான்
அரக்கனே!  அவன்தான்!  மனிதனே  இல்லை செய்த
       அழிவுக்கு  இனியேனும்  வாரதோ  எல்லை
மறக்கவோ  இயலாத  மாபாவி  அவனே யாரும்
       மன்னிக்க  இயலாத  கொடும்பாவி இவனே!

மத்திய  அரசிதை   மதித்திட  வேண்டும்  -தமிழ்
       மக்களின்  உணர்வினை மிதிப்பதா  மீண்டும்
கத்தியின் மேலிது நடப்பதே  ஆகும்  -கண்டும்
      காணாது  இருப்பதால்  நிலைமீறிப்  போகும்
சுத்தியால்  உடைப்பதா  கண்ணாடி  தன்னை உடைந்து
        சுக்கலாய்  ஆகாதோ   அறிவீரா !?  உண்மை!
சத்திய  சோதனை  செய்திட  வேண்டாம்  -ஏழரைச்
       சனியவன்  பக்சேவை  விரட்டுவீர்  ஈண்டாம்!

                                                                புலவர்  சா இராமாநுசம்

13 comments :

  1. திருவன்ன திருப்பதி வேங்கட நீயே –அவன்
    திரும்பியே சென்றிடச் செய்திடு வாயே//
    அந்த வேங்கடவன் தடுத்திட வேண்டும்

    ReplyDelete
  2. நன்றாகச் சொன்னீர்கள்... ஏழரைச் சனியல்ல... எழுபதரைச் சனி! உணர்வுள்ள தமிழர் அனைவரும் எதிர்ப்புத் தெரிவிக்கும் தீவிரவத்திலேயே அவன் ஓடிவிட வேண்டும் ஐயா!

    ReplyDelete
  3. அனைவரும் ஒன்று சேர்ந்து அவனின் வருகையை தடுக்க வேண்டும்...

    ReplyDelete
  4. // திருவன்ன திருப்பதி வேங்கட நீயே –அவன்
    திரும்பியே சென்றிடச் செய்திடு வாயே//

    மலைதன்னில் உறைகின்ற மாலவனைப் போலே
    மனம்நொந்த பகவானும் வேறொருவன் இல்லை
    கொலைகொள்ளை பலசெய்வோர் கும்பிடுவார் சென்றே
    கோவிந்தன் அருளிவர்க்குக் கிட்டுவதும் இல்லை

    அருமையான கவிதை ஐயா!

    ReplyDelete
  5. சரியாக சொன்னீங்க ஐயா.

    ReplyDelete
  6. இரக்கமே இல்லாதும் எம்மவர் தம்மை –அன்று
    இரத்தமே ஆறாக ஓடியே செம்மை
    நிறத்தையே ஈழமே பெற்றிடக் கொன்றான் –நஞ்சு
    நிரம்பிய குண்டினைப் போட்டுமே வென்றான்
    அரக்கனே! அவன்தான்! மனிதனே இல்லை –செய்த
    அழிவுக்கு இனியேனும் வாரதோ எல்லை
    மறக்கவோ இயலாத மாபாவி அவனே –யாரும்
    மன்னிக்க இயலாத கொடும்பாவி இவனே!

    ஒவ்வொரு வரிகளிலும் பொங்கிடும் தங்கள் மனக் குமுறல்
    எம் தேசத்தின் மேலுள்ள தீராத பற்றையும் அன்பையும் வெளிக்காட்டி
    நிக்கும் விதம் உங்களை எங்கள் மனக் கண்களால்த் தொழ வைத்துச்
    செல்கிறது ஐயா ! அருமையான கவிதை வரிகளால் தெளிவுபட நீங்கள்
    கேட்ட வரம் நிட்சயம் நிறைவேற வேண்டும் என்பதே எம் பிரார்த்தனையும்
    ஆகும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  7. அருமையான கவிதை! ஒவ்வொரு வரியும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  8. நாங்கள் ஏழு கோடி மக்களும் நாய்களோ பன்றிச்சேய்களோ!அழுது கொண்டிருப்பமோ ஆண்பிள்ளைகள் அல்லமோ!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...