Monday, November 18, 2013

சல்மானே ! நீர்சென்று-அங்கே சாதித் தென்ன?





சல்மானே ! நீர்சென்று-அங்கே
   சாதித் தென்ன?
சொல்வீரா  தீதேதும் - இதனால்
   தொடராதா இனியேதும்
கல்மனமும்  கரையுமென -கண்டு
   கேமரூன் கண்ணீர்விட!
பல்முறையும்  சென்றீரே -நீர்
    பகர்ந்தீரா ! பார்த்தீரா !

ஆணையிட  முடியாதாம் -அவன்
   ஆணவமாய் பேசுகின்றான்!
பூணையென  போய்விட்டு, -சத்தமின்றி
   பொறுமைமிக!  வாய்விட்டு,
மானமின்றி! மன்னிப்பும் -அடிமையென
   மண்டியிட்டு கேட்பதா!?
யானைபல  மிந்தியா – பலன்
   என்னவென !  சிந்தியா?

தொப்புள்  கொடியுறவு –இங்கே
    துடிக்கிறது ! வெடிக்கிறது!
தப்புக்குத்  துணையாக –அன்று
    தாளமிட்ட  காரணத்தால்
ஒப்புக்கே ஆடுகின்றார் –நடந்த
    உண்மையிலே!  நாடகமே!
செப்பிக்க ஏதுமில்லை! – வாழ
    செந்தமிழா ஒன்றுபடு!

                                புலவர்  சா  இராமாநுசம்

18 comments :

  1. #சல்மானே ! நீர்சென்று-அங்கே
    சாதித் தென்ன?#
    முதல் ஒரு வரியே போதும் அய்யா !
    த.ம 1

    ReplyDelete
  2. பாலுக்கும் காவல்.
    பூனைக்கும் தோழன்
    என்பார்கள்.
    கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    ஆனால் இங்கே நமது அரசாங்கமோ
    பாம்புக்கு தோழனாக இருக்கிறதே ??

    ஒரு அண்டை நாடு எதிரி நாடாக உருவாவதை விரும்ப இயலாது என்பதைத் தவிர வேறு எந்த காரணமும் இருக்க முடியாது.

    திரௌபதி ஆடை அகற்றப்படும் நிலையிலே அதை கண்டிக்காது இருந்த தடுக்காது இருந்த திருதராஷ்டிரன், துரோணன், பீஷ்மன், இருந்த நிலையிலே தான்

    இன்று நமது இந்திய அரசாங்கமும் இருக்கிறது.


    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  3. இது தானய்யா அரசியல்!

    ReplyDelete
  4. ஒன்றுபடு... முக்கியம் ஐயா...

    ReplyDelete
  5. "கல்மனமும் கரையுமென - கண்டு
    கேமரூன் கண்ணீர்விட!
    சல்மானே! நீர்சென்று - அங்கே
    சாதித் தென்ன?" என்று
    கேட்கத் தோன்றுகிறதே!
    கேமரூன் நாலு மாத
    எச்சரிக்கையாவது விட்டார்
    சல்மானே! நீர்சென்று - அங்கே
    எச்சரிக்கை ஏதும் விடாததேன்?

    ReplyDelete
  6. கவிதை அருமை புலவர் ஐயா.

    ReplyDelete
  7. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
    என்று உரைத்தனர் நம் முன்னோர்
    நாம் என்று ஒன்றுபடுகிறோமோ?
    அன்றுதான் நல்லது நடக்கும்.

    ReplyDelete
  8. அருமையாகச் சொன்னீர்கள்
    இயல்பான வார்த்தைகளில்
    சூடாகச் சாடியவிதம் மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. முதல்வரியே கலக்கல் ஐயா.

    அருமையான கவிதை

    ReplyDelete
  10. செந்தமிழா ஒன்றுபடு.....

    நல்ல முடிவு.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...