Wednesday, December 4, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் - பகுதி பதினெட்டு





                     ஈங்கிள்பர்க் (12-8-2013)

        வழக்கம்போல்  காலை  உணவை  முடித்துக் கொண்டு
புறப்பட்டோம்  அன்று நாங்கள் கண்ட இடம்  சுவிட்சர்லாந்தின்       அழகிய மலையில்  உயர்ந்த இடத்தில் (இரண்டாவது) உள்ள
மவுண்ட் டிட்லிஸ் மற்றும் லுசர்ன்  ஆகியன ஆகும்!

        மவுண்ட் டிட்லிஸ் கடல் மட்டத்திலிருந்து (10000) பத்தாயிரம்
அடி உயரமாகும்!  அங்கு செல்ல கேபிள் கார் மூன்று வகையில் அமைக்கப்
பட்டுள்ளன நூற்றுக் கணக்கான பெட்டிகள் மேலும் கீழும் சென்று வருவது
கண் கொள்ளாக் காட்சியாகும்! ஒரு பெட்டியில்  நம் இந்திய தேசியக் கொடி
சின்னமாக் பொறிக்கப்பட்டுள்ளது கண்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தோம்

        முதல் வகையில் ஏறி , இறங்கி, இரண்டாவது  வகையில் ஏறவேண்டும் ஒவ்வொரு பெட்டியிலும் ஆறுபேர் ஏற முடியும்  அதுபோலவே மூன்றாம் வகைப் பெட்டியிலும்  ஏற வேண்டும்                                                                                                     ஆனால் இது (மூன்றாம் வகைப் பெட்டி) வித்தியாசமாக, வட்டமான வடிவில் முப்பது நாற்பதுபேர் ஒரேநேரத்தில் ஏறி நிற்க வேண்டும் ! உட்கார இயலாது அதுமட்டுமல்ல, அது  செங்குத்தா மேலே ஏறும்போது நாலாபக்கமும் சுற்றிக் கொண்டே சென்ற காட்சி உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்று ,என்று  சொன்னார்கள்!

      ஒரு வகையாக இவ்வாறு மேலே வந்து சேர்ந்தோம்!

    பனிமூடிய சிகரத்தின் அழகினையும், எம்முடன்  வந்த சிலர்
அதில் நடந்து சென்றதையும் , பனி சறுக்கு விளையாட்டு ஆடியதையும்
வாழ் நாளில் மறக்க இயலா காட்சிகளாகும்!

         படங்களை கீழே  காணலாம்!


















9 comments :

  1. ஆஹா! அத்தனையும் அருமை..இயற்கையின் கொள்ளை அழகை ரசித்தேன். நன்றி ஐயா...

    ReplyDelete
  2. இனிய பயணம்... படங்கள் அனைத்தும் அட்டகாசம் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. படங்களும் பயணக்கட்டுரை மிக அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ரொம்ப நாள் கழித்து வரும் பதிவு. ரசித்தேன்.

    ReplyDelete
  5. நம் இந்திய தேசியக் கொடி சின்னமாக் பொறிக்கப்பட்டுள்ளது கண்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தோம்// ஓஹோ பரவாயில்லையே

    ReplyDelete
  6. பார்க்கச் சலிக்காத காட்சிகள்..... எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி புலவர் ஐயா....

    த.ம. 5

    ReplyDelete
  7. சிறப்பான அனுபம் .இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டுவதில்லைத்
    தங்களுக்குக் கிட்டியதை இட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் ஐயா .படங்களும் பகிர்வும் அருமை ! மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...